2026-ல் திமுகவிற்கு கடைசி பெஞ்ச் கூட கிடைக்காது - எரிமலையாய் வெடித்த சி.வி. சண்முகம் !
நூறு நாள் திட்ட பெயர் மாற்றத்திற்கு ராமன் ஆண்டான் என்ன ராவணன் ஆண்டாள் என்ன எங்களுக்கு வேண்டியது வேலை வாய்ப்பு தான்!

விழுப்புரம் : நூறு நாள் திட்ட பெயர் மாற்றத்திற்கு ராமன் ஆண்டான் என்ன ராவணன் ஆண்டாள் என்ன எங்களுக்கு வேண்டியது வேலை வாய்ப்பு தான் காந்தி பெயரை மாற்றியதில் என்ன இருக்கிறது என்றும் தன்னை மாதிரி பதவி வெறி பிடித்த தலைவர்கள் அதிமுகவை விட்டு செல்லலாம் ஆனால் தொண்டர்கள் செல்லமாட்டார்கள் என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம் விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தலைமையில் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் திமுக அரசின் ஆட்சி காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை பற்றியும், திமுகவினரை பற்றி கூட கவலை படாத ஆட்சியை திமுக மேற்கொண்டு வருவதாகவும், தானும் தன் குடும்பமும் வளர்ந்தால் போதும் என்று செயல்படுவதாகவும்,திமுக அரசின் மீது தமிழக மக்கள் கோபத்தில் உள்ளதால் ஒவ்வொரு நாளும் எப்போது திமுக ஆட்சியை சவக்குழிக்கு அனுப்புவோம் என மக்கள் காத்துள்ளதாக கூறினார்.
திமுக அரசின் மீது தமிழக மக்கள் கோபத்தில் உள்ளதால் ஒவ்வொரு நாளும் எப்போது திமுக ஆட்சியை சவக்குழிக்கு அனுப்புவோம் என மக்கள் காத்துள்ளதாக கூறினார். ஆட்சியை பற்றியும், மக்களை பற்றியும், பொதுமக்களை பற்றியும் அரசு ஊழியர்களை பற்றி சிந்திக்காமல் திமுக அரசு உள்ளதாகவும் நான்கே முக்கால் ஆண்டு தமிழகத்தில் ஊழல் செய்து கொண்டு திமுக உள்ளதால் மக்களை ஏமாளிகள் என்று நினைக்க வேண்டாம், ஒவ்வொரு ஐந்தாண்டிற்கும் ஒரு முறை ஆட்சி மாற்றம் ஏற்படும் அதனையும் உடைந்தெரிந்து ஆட்சி அமைத்தது அதிமுக, தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமலையே திமுக ஆட்சி செய்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.
என்னைமாதிரி பதவி வெறி பிடித்த தலைவர்கள் அதிமுகவை விட்டு செல்லலாம் ஆனால் தொண்டர்கள் செல்லமாட்டார்கள் எப்போதும் அதிமுகவில் தான் இருப்பார்கள் என்றும் திமுக சட்டமன்ற தேர்தலில் எதிர்கட்சியாக கூட இல்ல சட்டமன்றத்தில் கடைசி இருக்கையில் கூட இடம் கிடைக்காது, தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர பிரகடனம் நடைபெறுவதாகவும், ஒவ்வொரு நாளும் ஒரு நாடகத்தை திமுக அரசு செயல்படுத்துவதாகவும், திமுகவில் உள்ள அமைச்சர்கள் திட்டங்களுக்கு வைத்த பெயர்களை பேப்பரை பார்க்காமல் படிக்க முடியுமா என சவால் விடுத்தார். மக்களின் ஏழ்மையையும் வறுமையும் பயன்படுத்தி பொய்யான கவர்ச்சிகரமான திட்டங்களை கூறி திமுக செயல்படுவதாகவும், திமுக ஆட்சியில் ஐந்து லட்சம் காலி பணியிடங்கள் உள்ளதாகவும், இளைஞர்களின் வேலைவாய்ப்பில் திமுக அரசு மண்னை அள்ளி போட்டுள்ளதாகவும், ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மக்கள் வாக்களித்திடுவார்களா அதனை கூட முழுமையாக வழங்கவில்லை என தெரிவித்தார்.
மக்களிடம் ஆட்சிமாற்றம் ஏற்பட வேண்டுமென மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளதாகவும், மிக கவனமாக தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் திமுக வெற்றி பெற்றுவிடலாம் என மனகோட்டையில் உள்ளதாகவும் தேசிய ஜனநாயக கூட்டணி மக்களை நம்பி உள்ளதாக கூறினார். எத்தனை தலைவர்கள் அதிமுகவை விட்டு சென்றாலுல் 31 ஆண்டுகள் ஆட்சி கட்டிலில் அதிமுக இடம்பெற்றுள்ளதாகவும்,
தரவுகள் இல்லாமல் தேர்தல் பணி ஆற்ற முடியாது தேர்தலை சந்திக்க முடியாது ஜெயலலிதா எம் ஜி ஆர் காலத்தோடு அது போய் போச்சு , சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி வரையறை முடிந்தவுடன் பெண்களுக்கான இடஒதுக்கீடு 50 சதவிகிதம் வரும் 2031 சட்டமன்ற தேர்தலில் மகளிருக்கு 50 சதவிகிதமாக இருக்கும் என கூறினார். நூறு நாள் வேலை வாய்ப்பில் பெயர் மாற்றம் குறித்து விமர்சித்த சிவி சண்முகம் தெரிவித்த ராமன் ஆண்டான் என்ன ராவணன் ஆண்டாள் என்ன எங்களுக்கு வேண்டியது வேலை வாய்ப்பு தான் காந்தி பெயரை மாற்றியதில் என்ன இருக்கிறது இந்திராகாந்தி பெயர் மாற்றிய போதே அமைதியாக இருந்தவர்கள் தான் காங்கிரசார் என கூறினார்.























