திமுகவின் 2020-21 நிதி ஆண்டுக்கான வருவாய் 130% அதிகரித்துள்ளது. மேலும், இந்த காலகட்டத்தில் அதிமுகவின் மொத்த வருவாய் 38% குறைந்துள்ளது. முன்னதாக, திமுக, அதிமுக, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தங்கள் ஆண்டு வரவு/செலவு அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தன.


திமுக நிதி அறிக்கை:  


2021 நிதியாண்டில், திமுக-வின் மொத்த வருவாய் கிட்டத்தட்ட 150 கோடியாக உள்ளது. இதில், அதிகபட்சமாக நன்கொடை/நிதியுதவி/பரிசுப்பொருட்கள்  மூலமாக ரூ.113 கோடியைத் திரட்தியுள்ளது. கடந்த,நிதியாண்டில் இத்தகைய நிதி ஆதாரங்கள் மூலம் திமுக பெற்ற தொகை வெறும் 49 கோடியாக இருந்த நிலையில், தற்போது இரு மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது. இதில், தேர்தல் நிதி பத்திரங்கள் மூலமாக பெறப்பட்ட தொகை மட்டும் ரூ. 80 கோடியாகும்.     







முந்தைய நிதியாண்டில், நன்கொடை/நிதியுதவி/பரிசுப்பொருட்கள் மூலம் 58 கோடி ரூபாய் நிதி திரட்டிய அதிமுக,கடந்த (2020-21) நிதியாண்டில் வெறும் 2 கோடி மட்டுமே ஈட்டியுள்ளது. அதன், மொத்த வருவாய் 34 கோடியாக உள்ளது.           


தேர்தல் செலவீனங்கள்:   


2021 நிதியாண்டில், திமுகவின் மொத்தச் செலவினம் ரூ. 218 கோடி ஆகும். இதில், ரூ.213 கோடி தேர்தல் செலவீனங்களுக்கும், ரூ. 3 கோடி கட்சி நிர்வாகத்திற்கும் செலவழிக்கப்பட்டுள்ளது. அதற்கு, முந்தைய நிதியாண்டில், திமுகவின் மொத்த செலவினம் ரூ. 71 கோடி ஆகும். 




ரூ.213 கோடி, தேர்தல் செலவினங்களில்,நட்சத்திர பேச்சாளார்கள் பயணச் செலவுகளுக்கு தோரயமாக ரூ. 3 கோடியும், கட்சி பிரச்சாரத்திற்கு ஊடக விளம்பரத்தின் மீதான செலவுகளுக்கு தோரயமாக ரூ. 93 கோடியும் செலவழிக்கப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக அச்சு/மின்னணு ஊடகங்களில் ரூ. 56.6 கோடியும், வலைதளம் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக ரூ 37 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.  கட்சிக்கு பிரச்சார யுக்திகளை மேற்படுத்திக் கொடுத்த ஆலோசனை நிறுவனங்களுக்கு ரூ. 69 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. 



கடந்த நிதியாண்டில், 5 லட்சத்துக்கும் அதிகமான தொகையை நன்கொடை செய்தவர்களின் விவரம்   


 




மேலும், கட்சி தலைமையகத்தால் வேட்பாளருக்காக செலவிடப்பட்ட மொத்த செலவீனங்கள் மட்டும் ரூ. 48.75 கோடி ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  


தேர்தல் பத்திரங்கள் (Electoral Bonds): 


அரசியல் கட்சிகளுக்கு உறுதிமொழி அடிப்படையில் வழங்கப்படும் பத்திரங்களில் வாங்குபவரின் (அல்லது) பணம் செலுத்துபவரின் பெயர் இருக்காது. இந்த பத்திரத்தை வைத்திருக்கும் அரசியல் கட்சி அதன் உரிமையாளராக கருதப்படுகிறார். 


அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் பெறும் நன்கொடை விவரங்களை அறிக்கையாக அளிக்கத்தேவையில்லை என்ற நிலை பிற்போக்கான ஒரு செயல் என்று இந்தியா தேர்தல் ஆணையமே தெரிவித்துள்ளது. இதனால், அரசியல் கட்சிகள், அரசாங்கத்திடமிருந்து அல்லது வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெற்றுள்ளதா என்பதைக் கண்டறிய இயலாத சூழல் ஏற்படுகிறது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. 


தற்போதைய நிதியமைச்சர், பழனிவேல் தியாகராஜன் தேர்தல் பத்திரத் திட்டத்திற்கு எதிராக தொடர்ச்சியாக விமர்சனத்தை முன்வைத்து வருபவர். இருந்தாலும், திமுகவின் மொத்த வருமானத்தில் 80% தேர்தல் மூலம் பெறப்பட்ட நன்கொடைகளில் இருந்து வந்துள்ளது. 


IPAC DMK Expenditure | 2021 சட்டமன்றத் தேர்தலில், திமுக I PAC நிறுவனத்துக்கு அளித்தது ரூ.69 கோடியா?