Stalin swearing-in ceremony LIVE : அரசு கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார் எம்.எல்.ஏ கோ.வி செழியன்
DMK MK Stalin swearing-in ceremony : இன்று காலை 9 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் பதவியேற்றுக் கொள்கின்றனர்
ABP NADULast Updated: 07 May 2021 08:52 PM
Background
MK Stalin CM: 2021 சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 159 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. இதனையடுயத்து, கூட்டனியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மு. க. ஸ்டாலின் இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்கிறார்.முதலமைச்சராக பதவியேற்க உள்ள...More
MK Stalin CM: 2021 சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 159 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. இதனையடுயத்து, கூட்டனியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மு. க. ஸ்டாலின் இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்கிறார்.முதலமைச்சராக பதவியேற்க உள்ள மு க ஸ்டாலின் பரிந்துரைத்துள்ள 33 அமைச்சர்கள் பட்டியலுக்கு ஆளுநர்திரு பன்வாரிலால் புரோஹித் முன்னதாக ஒப்புதல் வழங்கினார். அதன்படி முதலமைச்சர் மு க ஸ்டாலின், பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி, காவல், உள்துறை உள்ளிட்ட துறைகளை கவனிப்பார். நீர்வளத்துறை அமைச்சராக துரைமுருகன், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக கே என் நேரு, கூட்டுறவுத் துறை அமைச்சராக ஐ பெரியசாமி, உயர்கல்வித் துறை அமைச்சராக திரு பொன்முடி, பொதுப் பணித்துறை அமைச்சராக எ வ வேலு, வேளாண் துறை அமைச்சராக எம் ஆர் கே பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வுத்துறைஅமைச்சராக மா சுப்ரமணியன் , நிதி அமைச்சராக திரு பழனிவேல் தியாகராஜன், மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சராக செந்தில் பாலாஜி , உள்ளிட்ட 34 பேர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று காலை 9 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் பதவியேற்றுக் கொள்கின்றனர்.
உள்ளதை உள்ளபடியே சொல்லுங்கள் - முதல்வர் மு.க ஸ்டாலின்
உள்ளதை உள்ளபடியே சொல்லுங்கள் என மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில், தனது முன்னுரையில் தெரிவித்த முதல்வர் மு.க ஸ்டாலின், அனைவரும் இணைந்து இந்த பேரிடரை சமாளிப்போம் என தெரிவித்தார்.
முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..
முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். கேரள முதல்வர் பினராயி விஜயனும் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். நூற்றாண்டுகளாக தொடரும் தமிழக - கேரள சகோதரத்துவ உறவை பேணிக் காத்து, சிறந்த இந்தியாவை நோக்கி உழைப்போம் என கூறியிருக்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை.. கட்டணத்தை தமிழக அரசு ஏற்கும்..
கொரோனா பாதிப்புக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்தால், அதற்கான கட்டணத்தை முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசே ஏற்கும். மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் தீர்வு காண, “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தை செயல்படுத்த புதிய துறை உருவாக்கம் என்னும் கோப்பில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.
ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு - முதல்வர் மு.க ஸ்டாலின்
ஆவின் பால் விலை ரூ.3 குறைப்பு, குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பத்துக்கு 4000 ரூபாய் அளிக்கப்படும், முதல்கட்டமாக இம்மாதமே ரூ.2000 வழங்கப்படும். அனைத்து மகளிரும் சாதாரண கட்டண பேருந்துகளில் நாளை முதல் இலவசமாகப் பயணிக்கலாம் என்னும் கோப்புகளில் முதல்வர் மு.க ஸ்டாலின் கையெழுத்திட்டிருக்கிறார்.
திராவிட இனத்தைச் சேர்ந்தவன் எனும் வாசகத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் சேர்த்தார் மு.க ஸ்டாலின்
திராவிட இனத்தைச் சேர்ந்தவன் எனும் வாசகத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் சேர்த்தார் மு.க ஸ்டாலின். இனித் தமிழகம் வெல்லும் என்னும் வாசகத்தையும் ட்விட்டரில் சேர்த்தார் மு.க ஸ்டாலின்
அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின்
தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார் முதல்வர் மு.க ஸ்டாலின். கோபாலபுரத்துக்கு வந்த முதல்வர் மு.க ஸ்டாலின், முன்னாள் முதல்வரும், அவரது தந்தையுமான கருணாநிதியின் படத்துக்கு மரியாதை செலுத்தினார். அஞ்சலி செலுத்தியபோது முதல்வர் கண்ணீர் உகுத்தார். அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி வருகிறார்.
தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார் முதல்வர் மு.க ஸ்டாலின்..
தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார் முதல்வர் மு.க ஸ்டாலின். கோபாலபுரத்துக்கு வந்த முதல்வர் மு.க ஸ்டாலின், முன்னாள் முதல்வரும், அவரது தந்தையுமான கருணாநிதியின் படத்துக்கு மரியாதை செலுத்தினார். அஞ்சலி செலுத்தியபோது முதல்வர் கண்ணீர் உகுத்தார்
தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார் முதல்வர் மு.க ஸ்டாலின்..
தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார் முதல்வர் மு.க ஸ்டாலின். கோபாலபுரத்துக்கு வந்த முதல்வர் மு.க ஸ்டாலின், முன்னாள் முதல்வரும், அவரது தந்தையுமான கருணாநிதியின் படத்துக்கு மரியாதை செலுத்தினார். அஞ்சலி செலுத்தியபோது முதல்வர் கண்ணீர் உகுத்தார்
தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார் முதல்வர் மு.க ஸ்டாலின்..
தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார் முதல்வர் மு.க ஸ்டாலின். கோபாலபுரத்துக்கு வந்த முதல்வர் மு.க ஸ்டாலின், முன்னாள் முதல்வரும், அவரது தந்தையுமான கருணாநிதியின் படத்துக்கு மரியாதை செலுத்தினார். அஞ்சலி செலுத்தியபோது முதல்வர் கண்ணீர் உகுத்தார்
கோபாலபுரத்துக்கு வந்த முதல்வர் மு.க ஸ்டாலின், முன்னாள் முதல்வரும், அவரது தந்தையுமான கருணாநிதியின் படத்துக்கு மரியாதை செலுத்தினார். அஞ்சலி செலுத்தியபோது மு.க ஸ்டாலின் கண்ணீர் உகுத்தார்.
தமிழகத்தின் உரிமைகளை மீட்சு தமிழர்களின் ஒருமித்த குரலாக இனி உங்கள் குரல் ஒலிக்கட்டும் - சூர்யா வாழ்த்து
'முடியுமா நம்மால்? என்பது தோல்விக்கு முன்பு வரும் தயக்கம்... 'முடித்தே தீருவோம்!" என்பது வெற்றிக்கான தொடக்கம்...
'முத்தமிழ் அறிஞர்' கலைஞர்.
'முடித்தே தீர வேண்டிய பல காரியங்கள் வரிசைகட்டி முன்நிற்க, சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று 'மக்களின் முதல்வராக' பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்,
சுவாசிப்பதற்கு 'உயிர் காற்று'கூட கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகிற இந்த பேரிடர் காலத்தில், நீங்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. தங்கள் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சியடையும் என்று நம்புகிறோம். தங்களுக்கும். ஆற்றலும் அனுபவமும் நிறைந்த மாண்புமிகு தமிழக அமைச்சர் பெருமக்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகள்.
தமிழகத்தின் உரிமைகளை மீட்சு தமிழர்களின் ஒருமித்த குரலாக இனி உங்கள் குரல் ஒலிக்கட்டும்.
என அகரம் அறக்கட்டளை நிறுவனர் சூர்யா வாழ்த்து தெரிவித்தார்.
சட்டமன்றத்தேர்தலில் வெற்றிபெற்று அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கப் போகும் திமுக தலைவர் மு.கச ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையினரின் பதவியேற்கும் விழா சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், இவ்விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தமைக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்மொழியின் மீட்சி, தமிழர்களின் நலன், தமிழினத்தின் தன்னுரிமை, வளக்கொள்ளைக்கெதிரான மண்ணுரிமை, சமூக நீதி, மாநிலத்தன்னாட்சி, ஏழ்வர் விடுதலை, மதவாதத்திற்கு எதிரான போர் போன்றவற்றில் சமரசமின்றி நின்று நிலைபெற்று தமிழகத்தின் குரலாய் ஒலிக்க வேண்டுமென விருப்பத்தைத் தெரிவிக்கிறேன்!
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்... என பதவியேற்றார்
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்.... தமிழக ஆளுநர் மு.க ஸ்டாலினுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்தி வைத்தார். பதவியேற்பு விழா உணர்வு பூர்வமாக நடைபெற்றது. உதயநிதி ஸ்டாலின் கண்கலங்கினர்.
விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் வாழ்த்து
தமிழகத்தின் விடியல்
முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் திமுக தலைவர் தளபதி மு.க ஸ்டாலின் அவர்களுக்கும் அவரது தலைமையில் பொறுப்பேற்கும் அமைச்சர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
திமுக அமைச்சரவை பதவியேற்பு விழா இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கிறது. முதல் அமைச்சராக பதவியேற்க உள்ள மு.க ஸ்டாலின் தனது வீட்டில் இருந்து சற்று முன் புறப்பட்டார்.
திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு தொல்.திருமாவளவன் வாழ்த்து
இன்று முதல்வராகப் பதவியேற்கும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கும் அமைச்சர்களாகப் பதவியேற்கும் யாவருக்கும் விடுதலைச்சிறுத்தைகளின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
பெரியார் அம்பேத்கர் கொள்கை வழியில், அண்ணா கலைஞர் செயற்களத்தில் உறுதிபட நின்று திறம்பட செயற்பட வாழ்த்துகள்.
தமிழக முதலமைச்சராக பதவி ஏற்கும் மு.க ஸ்டாலினுக்கு இனிய வாழ்த்துகள். தங்களின் பதவியேற்பு விழாவிற்கு அழைத்தமைக்கு நன்றி. கொரோனா பேரிடர் நேரத்தில் பொறுப்பேற்கும் தங்களின் பணி, தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாத்திடும் வகையில் அமைந்திட வாழ்த்துகிறேன் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாலளர் டிடிவி தினகரன் வாழத்து தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலினுக்கு அவரது சகோதரரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி வாழ்த்து தெரிவித்தார். நேற்று இதுகுறித்து வெளியிட்ட வாழ்த்துக் குறிப்பில், "தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்க உள்ள எனது தம்பி மு.க.ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சி கொடுப்பார். முதலமைச்சராக உள்ள ஸ்டாலினை பார்த்து பெருமைப்படுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சகங்கள். துறைகளின் பெயர் மாற்றம் - மு.க ஸ்டாலின் அறிக்கை
தமிழகத்தின் நீர்த் தேவையை நிறைவுசெய்யும் பொருட்டு 'நீர்வளத் துறை’ என்று தனி அமைச்சகம் உருவாக்கப்படுகிறது.
உழவர்களுடைய நலன்களையும் பேணிக் காப்பது அரசின் நோக்கம் என்பதால் வேளாண்மைத்துறை "வேளாண்மை - உழவர் நலத்துறை” என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.
காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் தொடர்பான ஆயத்தங்கள் - விழிப்புணர்வுக்காக சுற்றுச்சூழல் துறை, 'சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை' என்று பெயர்மாற்றம் செய்யப்படுகிறது.
பரந்துபட்ட நோக்கத்தில் மக்கள் நலவாழ்வுத்துறை 'மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை' என்று பெயர் சூட்டப்படுகிறது.
மீனவர்களுடைய நல வாழ்விற்கான திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என்கிற அடிப்படையில் மீன்வளத்துறை 'மீனவனம் - மீனவர் நலத் துறை’ என்று அழைக்கப்படுகிறது.
தொழிலாளர் திறன்களையும் மேம்படுத்த வேண்டி தொழிலாளர் நலத்துறையானது 'தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத் துறை’ என்று பெயரிடப்படுகிறது.
செய்தி - மக்கள் தொடர்புத் துறை 'செய்தித் துறை'யாக உருமாற்றம் அடைகிறது.
சமூக நலத்துறை என்பது பெண்களுக்கு உரிமை வழங்குகிற செயல்பாடுகளை உள்ளடக்கியதால் சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை' ' என்று வழங்கப்படவுள்ளது.
பணியாளர் என்கிற பதம் மனிதவளமாகவே மதிக்கப்பட வேண்டும் என்பதால் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை "மனிதவள மேலாண்மைத் துறை' என்று அழைக்கப்பட உள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்கிற துறை வெளிநாடு வாழ் தமிழச் நலன்" என்று பெயர் மாற்றம் அடைகிறது.
இவை வெறும் பெயர் மாற்றமாக இல்லாமல் செயல்பாட்டிலும் மிகப் பெரிய மாற்றங்களைத் திட்டங்களாகக் கொண்டு செயல்படத் தூண்டுகோல்களாக இருக்கும்.
கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாக கட்டளை அறை (War room) ஒன்றை உருவாக்க தலைமைச் செயலாளருக்கு மு.க ஸ்டாலின் அறிவுறுத்தினார். இந்த கட்டளை அரை தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் உருவாக்கப்படும். இதில் துறை செயலாளர்கள் மற்றும் அலுவலர்கள் அனைவரும் ஒரே அறையில் இருப்பார்கள். கொரோனா காலத்தில் துறைவாரியாக உத்தரவு பிறப்பிப்பதில் காலதாமதம் எதுவும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இந்த வார் ரூம் உருவாக்கப்படுகிறது.
முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்றவுடன், ஆளுநர் பதவி பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைப்பார். அதை தொடர்ந்து, அமைச்சர்கள் பதிவியேற்க உள்ளனர். பதவியேற்பு நிகழ்ச்சியையொட்டி, முதல்வருக்கான வாகனம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லம் வந்தடைந்தது. மேலும், தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அறை மற்றும் அமைச்சர்களின் அறைகள் புணரமைக்கப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் அறைக்கு முன்பு வைக்கப்பட இருக்கும் பெயர்பலகை தயார்நிலையில் உள்ளது