DMK Meeting : டிசம்பர் 1-ம் தேதி தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...! முக்கிய ஆலோசனைகள் என்னென்ன..?

DMK Meeting : டிசம்பர் 1-ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

DMK Meeting :  டிசம்பர் 1-ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 1-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.  

Continues below advertisement

முக்கிய ஆலோசனைகள் என்னென்ன..?

சென்னை அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 1-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்  நடைபெறும் என துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  மாவட்ட கழகத் செயலாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் டிசம்பவர் 1-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.அதன்படி, கட்சியின் உட்கட்சி விவகாரம், திமுக நிர்வாகிகள் செயல்பாடுகள், குறிப்பாக மறைந்த திமுக முன்னாள் பொதுச் செயலாளரான பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

புதிய நிர்வாகிகள் நியமனம்

இன்று திமுகவில் புதிய நிர்வாகிகளை கட்சித் தலைமை நியமித்துள்ளது. அதன்படி, தி.மு.க.வின் புதிய மாநில இளைஞர் அணிச் செயலாளர், துணைச் செயலாளர்கள் மற்றும் மாநில மகளிர் அணி - மகளிர் தொண்டர் அணி செயலாளர் மற்றும் இணை, துணைச் செயலாளர்கள், பிரச்சாரக்குழு செயலாளர்கள் மற்றும் மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர்கள் ஆகிய பொறுப்புக்கான உறுப்பினர்களை தி.மு.க. நியமித்துள்ளது. 

புதிய அறிவிப்பின்படி, தி.மு.க. இளைஞரணி செயலாளராக மீண்டும் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.  தி.மு.க.வின் மகளிர் அணி செயலாளராக இருந்த கனிமொழி, தற்போது துணை பொதுச்செயலாளராக பதவியேற்று இருக்கும் நிலையில் தற்போது புதிய மகளிர் அணி செயலாளராக விஜயா தாயன்பன் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க

Udhayanidhi: மீண்டும் இளைஞர் அணி செயலாளரானார் உதயநிதி..! மகளிர் அணி புதிய செயலாளர் யார்..?

Continues below advertisement