MK Stalin: இருக்கு சம்பவம் இருக்கு! திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
சட்டமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்துள்ள நிலையில், நாளை மறுநாள் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி இந்தியா முழுவதும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ளது. கடந்த முறை ஆளுங்கட்சியாக இருந்த திமுக-வே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று பலரும் கருத்துக்கணிப்பில் தெரிவித்திருந்தனர்.
திமுக படுதோல்வி:
ஆனால், அனைத்து கருத்துக்கணிப்புகளையும் பொய்யாக்கி முதலமைச்சர் நாற்காலியில் விஜய் அமர்ந்தார். யாருமே எதிர்பாராத வகையில் திமுக படுதோல்வி அடைந்தது. திமுக-வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டவர்கள் 59 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இதில் நேரடியாக திமுக-வைச் சேர்ந்தவர்கள் 50க்கும் குறைவே ஆகும். யாருமே எதிர்பாராத வகையில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்தார். இது மொத்த திமுக-வையும் அதிரவைத்தது.
இந்த சூழலில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே பல மாவட்டங்களிலும் கட்சி நிர்வாகிகள் முறையாக பணியாற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், தலைமை அவர்களை பெரியளவில் கண்டிக்காமல் எச்சரித்து அனுப்பியது. ஆனால், அதன் எதிரொலி தேர்தல் முடிவுகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்:
இந்த சூழலில், நாளை மறுநாள் நடைபெறும் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகளின் அலட்சியத்திற்கு அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள கட்சித் தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கூட்டணி கட்சியினருக்கு திமுக-வினர் ஒத்துழைப்பு அளிக்காதது, திமுக-வினருக்கு கூட்டணி கட்சியினர் ஒத்துழைப்பு அளிக்காதது, மூத்த நிர்வாகிகள் இளைஞர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காதது, தேர்தல் பணிகளை அலட்சியமாக மேற்கொண்டது என்று பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
நடவடிக்கை எடுப்பாரா மு.க.ஸ்டாலின்?
பின்னர், தோல்விக்கு பொறுப்பான நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கருதப்படுகிறது. குறிப்பாக, இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்விக்கு காரணம் யார்? கொளத்தூரில் நடந்தது என்ன? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதில் ஆளுங்கட்சிக்கு எதிராக மாபெரும் வெற்றி பெற வேண்டும் என திமுக முனைப்பு காட்டும். இதனால், அதற்கான பணிகளைத் தீவிரப்படுத்த கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது. அதற்கான முன்னெடுப்பும் இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நடைபெற உள்ளது.
மு.க.ஸ்டாலின் இல்லாமல் சட்டமன்றத்தில் திமுக செயல்படுவதால் உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதல் பொறுப்புகள் உருவாகியுள்ளது. இதனால், மூத்த உறுப்பினர்கள் அவருக்கு எவ்வாறு வழிகாட்டியாக செயல்பட வேண்டும்? மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பொறுப்பான எதிர்க்கட்சியாக எப்படி செயல்பட வேண்டும்? என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்குவார் என்று கருதப்படுகிறது.
Before You Go
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்





















