நெல்லையில் பாஜக பூத் கமிட்டி மாநாடு மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்று வருகிறது. மாநாட்டில் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், திருடாதே பாப்பா திருடாதே என்ற பாடலின் வரிகளை மறக்காதே பூத்தினை மறக்காதே என பாடினார். அவரைத்தொடர்ந்து பேசிய முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் அமர வைப்பது என்டிஏ கூட்டணியின் கடமை. முதல்வர் ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் பயப்படுவதாகவும் அண்ணாமலை குற்றம்சாட்டினார். 

பாஜகவில் இணைந்த திமுக பிரபலம்

அதன் பின்னர், திமுக நிர்வாகி அமித் ஷா முன்பு பாஜகவில் இணைந்துள்ளார். திமுக செய்தி தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அமித் ஷா முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். இவர் தென் தமிழகத்தில் திமுக வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் பேசிய அமித் ஷா, புன்னிய பூமியான தமிழகத்தில், தமிழில் பேச முடியாததற்காக வருந்துகிறேன். தமிழ் மண்ணை வணங்கி என்னுடைய உரையை தொடங்குகிறேன். ராஜேந்திர சோழனுக்கு பெரும் விழா எடுத்தவர் பிரதமர் மோடி என அமித்ஷா பேசினார். 

பின்பு பேசத் தொடங்கிய அவர், துணை குடியரசுத்தலைவர் பதவிக்கு தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணனை முன்னிறுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். திமுக தொடர்ந்து பல ஊழல்களை செய்து வருகிறது. சிறையில் இருக்கக் கூடியவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள் என அமித் ஷா தெரிவித்தார்.