தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய காவிரி நீர் பங்கீட்டை ஒதுக்காமல் கர்நாடக அரசு வஞ்சித்து வருகிறது. இதனால், தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. திமுக ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

Continues below advertisement

சுயநலக் கோழைகள்:

விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் வேளையில் அவர்களுக்காக குரல் கொடுக்காமல் சினிமா வியாபாரம் பார்க்கும் சுயநலக் கோழைகள்! உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அப்பட்டமாக மீறி, தமிழகத்திற்குச் சேர வேண்டிய காவிரி நீரைத் தர மறுக்கும் கர்நாடக அரசின் அடாவடித்தனத்தால், ஜூன் மாதம் வர வேண்டிய 9.19 TMC நீரில் கிடைத்ததோ வெறும் 2.915 TMC தான். ஜூலை மாதம் வர வேண்டிய 31.24 TMC-க்கு பதிலாகக் கர்நாடகா தந்ததோ வெறும் 0.459 TMC தான். 

துணிவில்லாத பொம்மை:

https://tamil.abplive.com/web-stories/spiritual/spiritual-benefits-of-wearing-a-ring-on-the-thumb-268834

Continues below advertisement

டெல்டா விவசாயிகள் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், தமிழ்நாட்டின் உரிமையைக் கேட்க வேண்டிய முதலமைச்சர் விஜய்யும், நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்தும், விவசாயத்துறை அமைச்சர் வினோத்தும், தங்கள் ஆட்சியை காக்க கூட்டணியில் உள்ளார்கள் என்ற காரணத்தாலும், தங்கள் சீட்டை பாதுகாக்கவும், கர்நாடக காங்கிரஸ் அரசை எதிர்த்துக் கேள்வி கேட்கத் துணிவில்லாமல் பொம்மை போலப் பதுங்குகிறார்கள்!

காவிரி உரிமைக்காகக் குரல் கொடுக்க வேண்டிய இந்த மூன்று அமைச்சர்களும், முதலமைச்சரும் தங்கள் 'ஜனநாயகன்' திரைப்படத்தைத் தியேட்டர்களில் உட்கார்ந்து ரசிப்பதிலும், படத்திற்குப் ப்ரோமோஷன் தேடுவதிலுமே பிஸியாக இருக்கிறார்கள்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகம் செல்லும் விஜய்:

கர்நாடகத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் காவிரி நீர் பங்கீடு விவகாரம் மிகப்பெரிய பிரச்சினையாக பல காலம் இருந்து வருகிறது. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தும் தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீர் பங்கீடு என்பது கிடைக்காமல் இருந்து வருகிறது.

இந்த சூழலில், கர்நாடக முதலமைச்சர் டிகே சிவக்குமாரை இந்த விவகாரம் தொடர்பாக நேரில் சந்திக்க வரும் ஆகஸ்ட் 3ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கர்நாடக செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் இருந்தபோதும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆளுங்கட்சியுடன் கூட்டணியில் இருந்தது என்பதும், அப்போது கர்நாடகத்திலும் காங்கிரஸ் ஆட்சி நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.