தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் மதுவகைகளின் விலை ரூ. 10 முதல் ரூ. 80 வரை உயர்த்தப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழக அரசு ஆண்டுக்கு, ரூ. 4,396 கோடி அதிகமாக வருமானம் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மதுவிலக்கு ஆயத்தீர்வை வரி மற்றும் விற்பனை வரியை உயர்த்துவதால் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்கிறது. இதன் காரணமாக மதுபானங்களின் விலை இன்று முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் மதுவகைக்கு ரூ. 10. 35 கோடியும், பீர்வகைக்கு ரூ. 1. 76 கோடி கூடுதலாக வருவாய் வர வாய்ப்பு இருக்கிறது. அதன்படி குவாட்டர் - ரூ.10 முதல் ரூ.20 வரையும், ஆஃப் பாட்டில் - ரூ.20 முதல் ரூ.40 வரையும், முழு பாட்டில் விலை - ரூ.40 முதல் ரூ.80 வரை உயர இருக்கிறது.


இந்நிலையில் இந்த விலை உயர்வுக்கு மதுபான பிரியர்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். வழக்கமாகவே நிர்ணயிக்கப்பட்ட விலையை விட  அதிக விலைக்குத்தான் மதுபானம் விற்கப்படும் என்றும், இந்த விலை உயர்வு மேலும் சுமையாக இருக்குமென்றும் தெரிவித்துள்ளனர். 


அண்ணாமலை ட்வீட்..


இந்த விலை உயர்வு குறித்து ட்வீட் செய்துள்ள பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை குறிப்பிட்டு ஒப்பிட்டுள்ளார். அவரது ட்வீட்டில், தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின்  ஆவின் விலை உயர்ந்தது. நெய் முதல் தயிர் வரை விலை உயர்ந்தது. இப்போது டாஸ்மாக்கில் குவாட்டர் முதல் பீர் வரை விலை உயர்ந்துள்ளது. ஒருவழியாக திமுக உறுதியளித்த விடியல் ஆட்சியை நாம் பெற்றுவிட்டோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.  


 








மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண