DMK: கொஞ்சம் கூட மரியாதை கொடுக்கல..! தவெக-வை தரம் தாழ்ந்து பேசிய முன்னாள் திமுக அமைச்சர் - நீங்களே பாருங்க
கருணாநிதி பிறந்தநாள் விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் தவெக-வை மிக கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது. மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடுவோம் என்ற கனவுக்கோட்டையில் இருந்த திமுக-வின் கனவை தவெக சுக்குநூறாக்கியது. இதுநாள் வரை அதிமுக மட்டுமே ஒரே எதிர்க்கட்சியாக இருந்த நிலையில், திடீரென தவெக எனும் புதிய கட்சி உருவெடுத்திருப்பது திமுக-வை நிலைகுலையச் செய்துள்ளது.
தரம் தாழ்ந்து பேசிய முன்னாள் அமைச்சர்:
திமுக தோல்வியைத் தொடர்ந்து திமுக ஆதரவாளர்களும், திமுக-வின் நிர்வாகிகள் தவெக-வை மிக கடுமையாக விமர்சித்து பேசி வருகின்றனர். திமுக-வின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் கருணாநிதி பிறந்தநாள் விழாவில் பேசும்போது, தற்போதைய ஆளுங்கட்சியான தவெக-வை மிகவும் தரம்தாழ்ந்து பேசினார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, "அதிமுக, பாஜக-வை திட்டிக்கொண்டு இருந்தோம். அவர்கள் நம்மை திட்டிக்கொண்டு இருந்தனர். இந்த நாய்களை நாம் கணக்கிலே எடுத்துக்கொள்ளவில்லை. நம்மாளுங்கதான் நம்மளை கெடுத்தாங்க. திருடன், ஊர்த்தாலி அறுத்தவன், அயோக்கியத்தனம் செய்தவன், கொலைகார பட்டியலில் பெயர் இருப்பவன் எல்லாம் வந்துவிட்டான். சட்டம் ஒழுங்கை மாத்திவிட்டியா. பொதுவாழ்க்கைக்கு வராதவன் எல்லாம் இன்று எப்படி வந்தானு தெரியல. போஸ்டர் ஒட்டல, நோட்டீஸ் ஒட்டல அவன்லாம் ஜெயிச்சுட்டான்.
இவ்வாறு அவர் பேசினார்.
திமுக - தவெக மோதல்:
முதலமைச்சர் என்றும் பாராமல் அவரது பதவிக்கு மரியாதை அளிக்காமல் தரக்குறைவாக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
திமுக-வின் தோல்வியைப் பொறுத்துக்கொள்ள முடியாத அந்த கட்சியின் ஆதரவாளர்களும், நிர்வாகிகளும் தொடர்ந்து இதுபோன்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, சமூக வலைதளங்களில் பலரும் தகாத வார்த்தைகளால் தவெக-வை விமர்சித்து வருகின்றனர்.
சில திமுக ஆதரவாளர்கள் மரியாதையுடன் கருத்து மோதல் நடத்தி வரும் நிலையில், பலரும் தரக்குறைவான வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்த துயரத்தை தாங்க இயலாத திமுக-வினர் பலரும் கொளத்தூர் தொகுதி மக்களுக்கு சாபம் அளிக்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Before You Go
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
ட்ரெண்டிங் செய்திகள்






















