நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேயர், துணை மேயர் நகராட்சித் தலைவர், துணைத் தலைவர் பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தலுக்கு திமுக, கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கியுள்ளது. அதன்படி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள்.. 


இந்திய தேசிய காங்கிரஸ்


மாநகராட்சி மேயர்


1. கும்பகோணம் - தஞ்சாவூர் மாவட்டம்.


மாநகராட்சி துணை மேயர்


1.சேலம் சேலம் மாவட்டம்
2. காஞ்சிபுரம் - காஞ்சிபுரம் மாவட்டம்.


நகராட்சித் தலைவர்


1.தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் 
2.தேனி - தேனி மாவட்டம்
3.காங்கேயம் - திருப்பூர் மாவட்டம் 
4. சுரண்டை - தென்காசி மாவட்டம்.
5.கருமத்தம்பட்டி - கோவை மாவட்டம்
6.கோபிசெட்டிபாளையம் - ஈரோடு மாவட்டம்.


நகராட்சி துணைத் தலைவர்


1.கூடலூர்- நீலகிரி மாவட்டம் 
2. ஆரணி திருவண்ணாமலை மாவட்டம்.
3.நரசிங்கபுரம் - சேலம் மாவட்டம்.
4.காரமடை-கோவை மாவட்டம். 
5. குடியாத்தம் - வேலூர் மாவட்டம்.
6. திருவேற்காடு - திருவள்ளூர் மாவட்டம்.
7. குன்றத்தூர் - காஞ்சிபுரம் மாவட்டம். 
8.தாராபுரம் - திருப்பூர் மாவட்டம்.
9.உசிலம்பட்டி - மதுரை மாவட்டம்.


பேரூராட்சி தலைவர்


1.மங்களம்பேட்டை - கடலூர் மாவட்டம்
2. சின்னசேலம் - கள்ளக்குறிச்சி மாவட்டம். 
3. வடுகப்பட்டி - தேனி மாவட்டம்.
4. பூலாம்பட்டி - சேலம் மாவட்டம்.
5.பிக்கட்டி - நீலகிரி மாவட்டம்.
6. பேரையூர்-மதுரை மாவட்டம். 
7. பட்டிவீரன்பட்டி - திண்டுக்கல் மாவட்டம்.
8.திருபெரும்புதூர் - காஞ்சிபுரம் மாவட்டம்.


பேரூராட்சி துணைத் தலைவர்


1.சங்கராபுரம் - கள்ளக்குறிச்சி மாவட்டம்.
2. ஜகதால - நீலகிரி மாவட்டம். 
3.கீழ்குந்தா-நீலகிரி மாவட்டம்.
4.மூலைக்கரைப்பட்டி - திருநெல்வேலி மாவட்டம். 
5. கன்னிவாடி - திருப்பூர் மாவட்டம்.
6.நங்கவல்லி - சேலம் மாவட்டம்.
7. கருப்பூர் - சேலம் மாவட்டம்.
8. டி.என்.பாளையம் - ஈரோடு மாவட்டம்.
9. நாட்றாம்பள்ளி - திருப்பத்தூர் மாவட்டம். 
10.உடையார்பாளையம் - அரியலூர் 
11.கணியூர் - திருப்பூர் மாவட்டம்.


முதல் தலித் சென்னை பெண் மேயர்: யார் இந்த 28 வயது பிரியா ராஜன்?


நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், சென்னையில் 178 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. சென்னை மாநகராட்சியின் மேயர் பதவி பட்டியலினப் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. 


இந்த சூழலில் சென்னை மாநகராட்சியின் முதல் தலித் பெண் மேயர் யார் என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த பிரியா ராஜன் சென்னை மேயராகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.  இவர் வட சென்னை பகுதியான திருவிக நகரில் இருக்கும் 74வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 


 பிரியா ராஜன் 28 வயதான எம்.காம். பட்டதாரி ஆவார். முன்னாள் எம்எல்ஏ செங்கை சிவத்தின் பேத்தி இவர்.









இதற்கு முன்பு தென் சென்னையைச் சேர்ந்தவர்களே திமுக சார்பில் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் வட சென்னையைச் சேர்ந்த இவர் தேர்ந்தெடுக்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. 


வட சென்னையைச் சேர்ந்தவர் மேயராக அறிவிக்கப்பட உள்ள நிலையில், துணை மேயராகத் தென் சென்னை பகுதியைத் சேர்ந்த மகேஷ் கும்மார் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.