மேலும் அறிய

Madurai: திமுக தோத்ததுக்கு காரணம் கட்சிக்காரன் தான்.. மூர்த்தி ஆதங்கம்.. கைதட்டிய தொண்டர்கள்!

மக்கள் நல்ல பாடத்தை இந்த சட்டமன்ற தேர்தலில் கொடுத்திருக்கிறீர்கள். அந்த பாடத்தை கொடுத்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மக்கள் சொன்னதையெல்லாம் செய்து கொடுத்தோம். நல்லது செய்ததற்கு ஓட்டு போடுவீர்கள் என நினைத்தோம் என முன்னாள் திமுக அமைச்சர் மூர்த்தி கவலை தெரிவித்துள்ளார். 

மதுரையில் நடைபெற்ற கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பி.மூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது தேர்தலில் மக்கள் திமுகவை தோற்கடித்ததன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 

அவர் பேசிகையில், “கலைஞர் கருணாநிதி மக்களுக்காக நிறைய செஞ்சிருக்காரு. அவரை கொண்டாட வேண்டும் என பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை. அதைப் பற்றி நினைத்தும் ஒரு பயனும் இல்லை. மக்கள் நல்ல பாடத்தை இந்த சட்டமன்ற தேர்தலில் கொடுத்திருக்கிறீர்கள். அந்த பாடத்தை கொடுத்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறினார். 

அப்போது அந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த திமுக தொண்டர்கள் சிலர் உற்சாக மிகுதியில் மூர்த்தி சோகமாக பேசியதை ஏதோ புகழ்ந்து பேசுவதாக எண்ணி கை தட்டினர். அதனைக் கண்டு டென்ஷனான அவர், “திமுக தோற்று போய் விட்டது என சொல்லிக் கொண்டிருக்கிறேன். கைதட்டுகிறீர்களே, அதனால் தான் நாம் விளங்காமல் இருக்கிறோம். திமுக இப்படி நாசமாக போனதுக்கு காரணம் திமுகக்காரன் தான். 

ஏனென்றால் யார் நம்முடைய ஏரியாவுக்கு நல்லது செய்திருக்கிறார் என மக்கள் பார்க்கவில்லை. மக்கள் சொன்னதையெல்லாம் செய்து கொடுத்தோம். நல்லது செய்ததற்கு ஓட்டு போடுவீர்கள் என நினைத்தோம். ஆனால் வீட்டு குழந்தைகள் சொன்னார்கள் என தீர்மானித்து வாக்களித்துள்ளீர்கள். இன்றைக்கு அதைப் பற்றி பேசுவதற்கு திமுக விரும்பவில்லை. 

இந்த இயக்கம் எப்போதும் மக்கள் பிரச்னைக்காக முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும். இந்த நிகழ்ச்சியில் அரசியல் பேச நான் விரும்பவில்லை. திமுக உணர்வு இருந்தாலே இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. அப்படிப்பட்ட திமுக குடும்பத்தில் இருந்துக் கொண்டு வீட்டு குழந்தைகள் சொன்னார்கள் என ஓட்டை மாற்றி போட்டு விட்டார்கள். இதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்லை. இதைவிட பல பிரச்னைகளை எல்லாம் சந்தித்து தான் இந்த இயக்கத்தை கட்டிக் காத்துள்ளார்கள். இப்போது உள்ள திமுக தலைவர் ஸ்டாலினும் அதைத்தான் செய்வார்” என மூர்த்தி தெரிவித்தார். 

திமுக அரசில் வணிகவரித்துறை அமைச்சராக இருந்த மூர்த்தி, சட்டமன்ற தேர்தலில் மதுரை கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் களமிறங்கினார். அவர் தவெக வேட்பாளர் கார்த்திகேயனிடம் சுமார் 16,540 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இந்த தேர்தலில் முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் தொடங்கி 16 அமைச்சர்கள் தோல்வியடைந்தனர். அதில் மூர்த்தியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Madurai: திமுக தோத்ததுக்கு காரணம் கட்சிக்காரன் தான்.. மூர்த்தி ஆதங்கம்.. கைதட்டிய தொண்டர்கள்!
Madurai: திமுக தோத்ததுக்கு காரணம் கட்சிக்காரன் தான்.. மூர்த்தி ஆதங்கம்.. கைதட்டிய தொண்டர்கள்!
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
தமிழ்த்தாய் வாழ்த்து 3ம் இடம்.. த்ரிஷாவுக்கு முதல் இடமா? - விஜயை விளாசிய நக்கீரன் கோபால்!
தமிழ்த்தாய் வாழ்த்து 3ம் இடம்.. த்ரிஷாவுக்கு முதல் இடமா? - விஜயை விளாசிய நக்கீரன் கோபால்!
நல்ல ஸ்கூல்.. தலைமையாசிரியர் அறையில் பீர் பாட்டில்.. ஆய்வு செய்த தவெக எம்.எல்.ஏ., அதிர்ச்சி!
நல்ல ஸ்கூல்.. தலைமையாசிரியர் அறையில் பீர் பாட்டில்.. ஆய்வு செய்த தவெக எம்.எல்.ஏ., அதிர்ச்சி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
TN Weather Update: இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை
இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை
Fire Accident: மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..! 10 பேர் உடல் கருதி பலி - ICU வார்டில் நடந்தது என்ன?
மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..! 10 பேர் உடல் கருதி பலி - ICU வார்டில் நடந்தது என்ன?
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
Minister Srinath: இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?
இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?
Donald Trump: “நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.!“ ஒப்புக்கொண்ட ட்ரம்ப்; ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் எனவும் பேட்டி
“நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.!“ ஒப்புக்கொண்ட ட்ரம்ப்; ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் எனவும் பேட்டி
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
TMC Rift: ”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
Embed widget