தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து அடுத்த 3 நாட்களுக்கு சுமார் 11 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னையில் எங்கிருந்து இருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது? என்பதை கீழே காணலாம்.


கிளாம்பாக்கம்:


திருச்சி, கரூர், மதுரை, நெல்லை, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோயில், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், பொள்ளாச்சி, ராமேஸ்வரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம், திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோயிலூர், விருத்தாச்சலம், அரியலூர், திட்டக்குடி, செந்துறை, ஜெயங்கொண்டம், போளூர், வந்தவாசி.


திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம்.


திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில்


திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும்.


கோயம்பேடு:


வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் மற்றும் பெங்களூர்.


திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள்.


கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம், திருவாரூர் மற்றும் திருத்துறைப்பூண்டி.


மாதவரம்:


பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, செங்குன்றம் வழியாக ஆந்திரா செல்லும் பேருந்துகள். மாதவரத்தில் இருந்து வழக்கமாக இயங்கும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை செல்லும் பேருந்துககள்