வானத்தில் வண்ண வண்ண கலர் மத்தாப்புகள் கொளுத்தி வான் அதிர வெடிகள் வெடித்து சிறுவர் முதல் பெரியவர் வரை அனைத்து மதத்தினர்களும் தீபாவளியை உற்சாக கொண்டாடினார்கள்.


 


 




கரூர் மாவட்டத்தில் நகர் பகுதி மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள பகுதிகள் தெருக்கள் முழுவதும் வெடிகள் வெடித்தும், மத்தாப்பூக்கள் கொழுத்தியும் சிறுவர்கள் முதல் மற்றும் நடுத்தர வயதினர், முதியோர்கள், புதுமணத் தம்பதிகள் தங்களது தலை தீபாவளியை குடும்பதினரோடு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.


 




இந்துகளின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பார்க்கப்படுகிறது. ஆனால் மதங்களைக் கடந்து அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருக்கெடுத்தோடும் நன்னாளாக தீபாவளி  இருந்து வருகிறது. குடும்பத்தோடு கோயில்களுக்கும் சென்று பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். தீபாவளி திருநாள் அன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் வைத்து குளித்து, புத்தாடைகளை அணிந்து இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாடுவர்.  ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் செய்த இனிப்பு உள்ளிட்ட பலகாரங்களை அக்கம், பக்கத்தினருக்ககு   கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்வர்.  


 




 


அந்தவகையில் கரூர் மக்கள் அதிகாலையே வாசலில் வண்ண கோலம் இட்டு புத்தாடை உடுத்தி, இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து மக்கள் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினர். அதிகாலை முதலே பட்டாசு வெடிக்கும் சத்தம் காதுகளில் ஒலிக்கத் தொடங்கி விட்டது. இந்துக்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினர்.