வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயலின் காரணமாக ராமேஷ்வரத்தில் இயக்கப்படும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

Continues below advertisement

டிட்வா புயல்: 

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைக் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயலுக்கு டிட்வா என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த புயலானது சென்னைக்கு தென்கிழக்கே 500  கி.மீ. தூரத்திலும், புதுச்சேரிக்கு 430 கி.மீட்டர் தொலைவிலும் நிலைக்கொண்டுள்ளது. முதலில் 10 கி.மீ வேகத்தில் நகர்ந்த நிலையில் தற்போது 4 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.

பாதி வழியில் நிறுத்தப்பட்ட ரயில்கள்

இந்த புயலின் காரணமாக ராமேஸ்வரம் கடற்பகுதியில் காலையில் மணிக்கு 65 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால் சென்னை மற்றும் இதர ஊர்களில் இருந்து வந்த ரயில்கள் மண்டபத்தில் நிறுத்தப்பட்டது. மேலும் பயணிகளுக்கு பேருந்து வசதி செய்யப்பட்டு ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

Continues below advertisement

ரயில் சேவையில் மாற்றம்: 

பாம்பன் பாலத்தில் காற்றின் வேகம் மணிக்கு 58 கி.மீ வேகத்தில் பதிவானதால், ரயில் சேவைகளில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன: 

  • 28.11.2025 அன்று 22.30 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட  ரயில் எண் 16733 ராமேஸ்வரம் ஓகா எக்ஸ்பிரஸ் முழுமையாக ரத்து செய்யப்பட்டது 
  • 28.11.2025 அன்று 20.50 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய ரயில் எண் 22662 ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் சேது சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் மண்டபத்தில் இருந்து புறப்படும்.
  • ரயில் எண் 16104 ராமேஸ்வரம் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் 29.11.2025 அன்று மாலை 4 மணிக்கு ராமேஸ்வரத்திற்கு பதிலாக  ராமநாதபுரத்தில் இருந்து புறப்படும்.
  • ரயில் எண். 16344  திருவனந்தபுரம் செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் 29.11.2025 அன்று மதியம் 13.30 மணிக்கு ராமேஸ்வரத்திற்கு பதிலாக ராமநாதபுரத்தில் இருந்து புறப்படும்.
  •  ரயில் எண். 16850. ராமேஸ்வரம் - திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ் 29.11.2025 அன்று மதியம் 15.00 மணிக்கு ராமேஸ்வரத்திற்கு பதிலாக ராமநாதபுரத்தில்  இருந்து புறப்படும்.
  • ரயில் எண். 16752. ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் 29.11.2025 அன்று ராமேஸ்வரத்திற்கு பதிலாக மாலை  17.50 மணிக்கு மண்டபத்தில் இருந்து புறப்படும்.
  • ரயில் எண். 22621. ராமேஸ்வரம் கன்னியாகுமரி எகஸ்பிரஸ்  29.11.2025 அன்று இரவு 21.15 மணிக்கு மண்டபத்திலிருந்து  புறப்படும்  
  • ரயில் எண்.16780 ராமேஸ்வரம் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலானது மதுரையில் இருந்து புறப்படும்
  • ரயில் எண்.56716 ராமேஸ்வரம் - மதுரை பயணிகள ரயிலானது .28 மற்றும் 29.11.2025 அன்று மாலை 6.15 மணிக்கு உச்சிப்புளியில் இருந்து புறப்படும்
  • ராமேஸ்வரம் - மதுரை பயணிகள் ரயில் (வண்டி எண் 56712) 29.11.2025 அன்று காலை 05.45 மணிக்கு உச்சிப்புள்ளியில் இருந்து புறப்படும்.
  • ரயில் எண் 56714 ராமேஸ்வரம் - மதுரை பயணிகள் ரயில் (வண்டி எண் 56714) 29.11.2025 அன்று காலை 11.40 மணிக்கு உச்சிப்புள்ளியில் இருந்து புறப்படும். 

பாதியில் ரத்து செய்யப்படும் ரயில்கள்:

  • ரயில் எண் 22614 அயோத்தி கான்ட்மென்ட்-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 26.11.2025 அன்று இரவு 23.10 மணிக்கு அயோத்தி கான்ட்மென்ட்-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்) மண்டபத்தில் நிறுத்தப்படும். 
  • ரயில் எண் 22661 சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் சேது சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 22661) 28.11.2025 அன்று மாலை 5.45 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயிலானது மண்டபத்தில் நிறுத்தப்படும். 
  • ரயில் எண் 16103 தாம்பரம் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 16103) 28.11.2025 அன்று 18.10 மணி நேரம் புறப்படும் ரயிலானது மண்டபத்தில் நிறுத்தப்படும். 
  • ரயில் எண். 16751 சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் 28.11.2025 அன்று 19.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயிலானது ராமநாதபுரத்தில் நிறுத்தப்படும்.
  • ரயில் எண் 16343 திருவனந்தபுரம் சென்ட்ரல் – ராமேஸ்வரம் அமிர்தா எக்ஸ்பிரஸ், 28.11.2025 அன்று இரவு 20.30 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரலிலிருந்து   மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படும்.
  • ரெயில் எண் 16779 திருப்பதி – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், 28.11.2025 அன்று 11.55 மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்பட்டு மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படும்.
  • ரயில் எண் 20849 புவனேஸ்வர் – ராமேஸ்வரம் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், 29.11.2025 அன்று 12.10 மணிக்கு புவனேஸ்வரில் இருந்து  மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படும்.
  • ரயில் எண் 56713 மதுரை – ராமேஸ்வரம் பயணிகள் ரெயில், 28 மற்றும் 29.11.2025 ஆகிய தேதிகளில் மதுரையிலிருந்து 13.50 மணிக்கு புறப்பட்ட ரெயில்கள் உச்சிப்புளி வரை மட்டுமே இயக்கப்படும்.
  • ரயில் எண் 56715 மதுரை – ராமேஸ்வரம் பயணிகள் ரெயில், 28 மற்றும் 29.11.2025 அன்று 18.15 மணிக்கு மதுரையிலிருந்து புறப்படும் உச்சிப்புளி வரை மட்டுமே இயக்கப்படும்.
  • ரயில் எண் 56711 மதுரை – ராமேஸ்வரம் பயணிகள் ரெயில், 29.11.2025 அன்று காலை 06.50 மணிக்கு மதுரையிலிருந்து புறப்படும் ரயில் உச்சிப்புளி வரை மட்டுமே இயக்கப்படும்.