மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் அவர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இன்றைய கூட்டத்தில் ஓய்வூதியம், வங்கிகடன், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் போன்றவைகள் கேட்டு மொத்தம் 715 மனுக்கள் பெறப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 95 மனுக்கள் பெறப்பட்டது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கென்று பிரத்யேக இருக்கைகள் அமைத்து அமரவைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்களுக்கு இன்றும், பிற மனுக்கள் மீதும் ஒரு வார காலத்தில் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 5 நபருக்கு ரூ.13,900 காதொலிக்கருவிகளையும் , 1 நபருக்கு ரூ7900 மதிப்பீட்டில் வீல்சேர், 1 நபருக்கு ரூ.7600 மதிப்பீட்டில் மூன்று சக்கர வண்டியும் , தமிழ் வளர்ச்சித்துறையின் 2022-23 ஆம் ஆண்டிற்கான கல்லூரி மாணவரிகளுக்க்கிடையே பேச்சாற்றல், படைப்பாற்றலை வளர்க்கும் நோக்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ.10000 மற்றும் பாராட்டு சான்றிதழ்களும், இரண்டாம் பரிசு 7000 மற்றம் சான்றிதழ்களும், மூன்றாம் பரிசு ரூ..5000 க்கான காசோலையும் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர்.இ.ஆ.ப. வழங்கினார்கள்.
இரண்டாம் பரிசு ரூ.3000க்கான காசோலை மற்றும் சான்றிதழும், சிறப்பாக பணியாற்றி எடையாளருக்கான முதல் பரிசு ரூ.3000 க்கான காசோலை மற்றும் சான்றிதழ்களும் என மொத்தம் 26 பயனாளிகளுக்கு ரூ.9,80,900 மதிப்பீட்டில் அரசு நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ம.கண்ணன், திட்ட இயக்குநர்கள் வாணிஈஸ்வரி (ஊரக வளர்ச்சி முகமை), சீனிவாசன் (மகளிர் திட்டம்) தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சைபுதீன், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் காமாட்சி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.