மேலும் பல பிரபலங்கள் தொடர்ந்து நிதி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. கொரோனா பெருந்தொற்று கடந்த ஓர் ஆண்டினை கடந்து உலகையே வாட்டி வதைத்து வருகின்றது. மக்கள் பெரும்பான்மையானோரின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக மாற்றியுள்ளது கொரோனா என்றால் அது மிகையல்ல. கொரோனாவின் இரண்டாம் அலையின் கோரத்தாண்டவம் தற்போது தான் மெல்ல மெல்ல அகன்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மூன்றாம் அலை 6 அல்லது 8 வாரங்களில் தாக்கக்கூடும் என்ற செய்தி வெளியாகி மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.  

Continues below advertisement




இந்நிலையில் நிலைமையை சமாளிக்க, கொரோனாவிற்கு எதிரான இந்த போரை மேற்கோள் பொதுமக்கள் தாராளமாக நிதி அளித்து உதவுமாறு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இதனை தொடர்ந்து தற்போது பிரபல இயக்குநர் சுசீந்திரன் ரூபாய் 5 லட்சத்தை தற்போது முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளார். மேலும் இதுகுறித்து சுசீந்திரன் வெளியிட்ட அறிக்கையில் 'இந்த கொரோனா காலகட்டத்தில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு உதவிடும் எண்ணத்தில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி முதல் ஆன்லைனில் திரைப்பட இயக்கம் மற்றும் நடிப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தினேன்.'






Tamilnadu Lockdown News: ஊரடங்கு 28-ஆம் தேதி வரை நீட்டிப்பு..! 11 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் இல்லை.


'அதில் கலந்துகொண்டோர் வழங்கிய கட்டண தொகை மொத்தமாக ஐந்து லட்சம் ரூபாய்யை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளோம். இந்த வகுப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி, மற்றும் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்த கே.வி மோத்தி, மக்கள் தொடர்பாளர் திருமதி ரேகா அவர்களுக்கும், என் உதவியாளர்கள் வினோத், புவனேஷ் மற்றும் வைஷாலி அவர்களுக்கும், மற்றும் எங்களோடு துணையாக நின்ற தொழில்நுட்ப கலைஞர்கள் நிவாஸ், சரவணன், சூர்யா தேவன் அவர்களுக்கும். முக்கியமாக இந்த செய்தியை அனைவருக்கும் கொண்டு சென்று அறியச்செய்த அனைத்து பத்திரிக்கை நண்பர்களுக்கும் ஊடகத்துறை மற்றும் சமூக வலைத்தளத்தினருக்கும், எங்களுக்கு ஆதரவு தந்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி' என்று குறிப்பிட்டுள்ளார்.