மேலும் அறிய

தேர்தல் செலவுக்காக அரசின் கஜானாவை காலியாக்கும் திமுக? - டிடிவி தினகரன் என்ன சொல்கிறார்?

தேர்தல் செலவுக்காக அரசின் கஜானாவை காலியாக்கத் துடிக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது - டிடிவி தினகரன்

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில், தேர்தல் செலவுக்காக  டெண்டர்களையும், ஏலங்களையும் அள்ளி வீசி அரசின் கஜானாவை காலியாக்கத் துடிக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

தமிழகத்தில் சாலை, குடிநீர் குழாய் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை சார்ந்த பணிகளுக்காக கடந்த 15 தினங்களில் மட்டும் சுமார் 5 ஆயிரம் டெண்டர்களும், ஒரே நேரத்தில் 50க்கும் அதிகமான கல்குவாரிகளுக்கு ஏலமும் அவசரகதியில் அறிவிக்கப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. 

ஆட்சிக்கு வந்த ஐந்து ஆண்டுகளில் அரசுத்துறை சார்ந்த பணிகளை மேற்கொள்வதிலும், மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதிலும் மெத்தனப் போக்கையே கடைபிடித்து வந்த திமுக அரசு, சட்டமன்ற தேர்தலுக்கான கால அவகாசம் நெருங்கி வரும் நிலையில், ஒரே நேரத்தில் டெண்டர்களையும், ஏலங்களையும் அள்ளி வீசி அரசு கஜானாவை காலியாக்க முயல்வது கடும் கண்டனத்திற்குரியது. 

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு டெண்டர்களையும், ஏல அறிவிப்புகளையும் வெளியிட்டிருக்கும் திமுக அரசு, சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே அனைத்துவித பணிகளையும் இறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்திருப்பதன் மூலம், தேர்தல் செலவுக்காக நிதி ஆதாரங்களை பெருக்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   

எனவே, ஆட்சிக்காலத்தின் இறுதி நேரத்தில் கிடைத்தவரை லாபம் என அரசின் கஜானாவை முழுமையாக காலியாக்கத் துடிக்கும் திமுகவுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில், இனி எக்காலத்திற்கும் ஆட்சிக்கு வரவே முடியாத அளவிற்கு தமிழக மக்கள் ஒன்றிணைந்து தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள்: 100 ரூபாய் பத்திரத்தில் அச்சிடப்பட்ட தவெக-வின் வாக்குறுதிகள்..!
விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள்: 100 ரூபாய் பத்திரத்தில் அச்சிடப்பட்ட தவெக-வின் வாக்குறுதிகள்..!
‘வாயில் நுழையாத வட மொழி பெயர் ; வக்காலத்து வாங்கும் EPS’ கோபமான அமைச்சர் ஐ.பி..!
‘வாயில் நுழையாத வட மொழி பெயர்’ ஆவேசமான அமைச்சர் ஐ.பி..!
சத்துணவா? விஷ உணவா? கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 44 பேர் வாந்தி, மயக்கம்- அன்புமணி கண்டனம்!
சத்துணவா? விஷ உணவா? கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 44 பேர் வாந்தி, மயக்கம்- அன்புமணி கண்டனம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance seat allocation : எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
Hormuz Trump New Warning: “ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
“ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
iPhone 16 Huge Discount: ஐபோன் 16 வாங்க காத்திருந்தவங்க முந்துங்க.! ரூ.19,000 தள்ளுபடி.! எங்க, எப்படி வாங்குறது.? பாருங்க
ஐபோன் 16 வாங்க காத்திருந்தவங்க முந்துங்க.! ரூ.19,000 தள்ளுபடி.! எங்க, எப்படி வாங்குறது.? பாருங்க
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Embed widget