தருமபுாி நகராட்சி அலுவலகம் முன்பு  கே.பி.அன்பழகன் தலைமையில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி,  அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே திமுக அரசு பொய் வழக்குகளை போட்டு பயமுறுத்தி வருகிறது. மு.க.ஸ்டாலின் எதிர்க் கட்சியாக இருந்தபோது அதிமுக அரசை விமர்சனம் செய்து பேசினார் என கூறி, திமுக தலைவர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குரல் போல் பேசினார்.



 

திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், தருமபுரி மாவட்டத்தில் கொரானோ உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் மறைக்கப்பட்டதாகவும், கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ஒரு கோடி வழங்க வேண்டும் என கூறிய ஸ்டாலின் தற்போது 50,000 மட்டுமே தருவதாகவும், 50 லட்சமாவது கொடுத்தால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பேருதவியாக இருக்கும் எனவும் கூறிய அவர், திமுக அரசு கொரோனா விவகாரத்தில் பொய்யான தகவல்களை கொடுத்ததாகவும் கூறி ஒருமையில் பேசினார்.




 

தருமபுரி அருகே சிப்காட்டிற்கு விளை நிலம் கையகபடுத்த விவசாயிகள் எதிர்ப்பு-நிலம் அளவீடு செய்ய காரில் சென்ற அரசு அதிகாரிகளை சிறைபிடித்து போராட்டம்

 

தருமபுரி அடுத்த அதியமான்கோட்டை ஊராட்சிக்குபட்ட வெத்தலன்காரன் பள்ளம் என்ற கிராமத்தில் சிப்காட்டிற்கு நிலம் அளவீடு செய்ய காரில் சென்ற அரசு அதிகாரிகளை அப்பகுதி விவசாயிகள், கிராம மக்கள் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகள் சென்ற வாகனங்களை சிறை பிடித்தனர். தங்களது வாழ்வாதாரமாக இருந்து வரும் விளைநிலங்களை ஒரு போதும் சிப்காட்டிற்கு கொடுக்க மாட்டோம், தங்களின் நிலங்களை கையகப்படுத்தக் கூடாது. சிப்காட் வேண்டாம் என்று சொல்லவில்லை அரசுக்கு சொந்தமாக உள்ள நிலங்களை பயன்படுத்தி கொள்ளட்டும், விளை நிலங்கள் தர முடியாது என்பது விவசாயிகள் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



 


பாலமேடு ஜல்லிக்கட்டு - பறையர் சமூகத்தைச் சேர்க்க கோரிய வழக்கு தள்ளுபடி


மேலும் நிலம் அளவீடு செய்ய வந்த அரசு அதிகாரிகள் கிராம மக்களால் சிறைபிடிக்கப்ப்ட்ட சம்பவத்தை அறிந்து அதியமான் கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றனர். விவசாய விளை நிலங்கள் கையகபடுத்துவதா வேண்டாமா என்பது குறித்து சம்மந்தபட்ட துறையின் உயர் அதிகாரிகளுக்கு தெரியபடுத்துகிறோம், அதுவரை எந்த ஒரு பணிகளும் செய்ய மாட்டோம் என அதிகாரிகள், போலீசார், விவசாயிகள் கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.





 


தீரன் பட பாணியில் கொள்ளை - துப்பாக்கி முனையில் 25 சவரன் நகை, 40,000 ரொக்கத்தை திருடி சென்ற கொள்ளையர்கள்


தொடர்ந்து  உடன்பாடு ஏற்பட்ட பிறகே சுமார் நான்கு மணி நேரத்திற்கு பிறகு சிறைபிடிக்கப்பட்ட அரசு அதிகாரிகளின் வாகனங்கள் பத்திரமாக விடுவிக்கபட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் கண்டித்து, கிராம மக்கள் போராட்டம் நடத்திய நிலையில், மீண்டும் அதிகாரிகளை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்திய சம்பவம், தருமபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.