கர்நாடக மாநிலம் குடகு மலையில் உருவாகும் காவேரி ஆறு பல்லாயிரம் மையில்கள் கடந்து டெல்டா மாவட்டங்களில் காவிரி கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டம் மேலையூரில் உள்ள கடைசி கதவணை வழியாக  பூம்புகார் கடலில் சங்கமிக்கிறது. தமிழகத்தில் ஆண்டுதோறும் டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகாவில் போதிய மழை இன்மை, மேட்டூர் அணையில் நீர் வரத்து குறைவு காரணமாக, வழக்கமாக திறக்கப்படும் ஜூன் 12 ஆம் தேதி என்பது மாறி கால தாமதமாகவே தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. 





இதன் காரணமாக டெல்டா மாவட்ட விவசாயிகள் அதுவும் குறிப்பாக காவிரி கடைமடை மாவட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் பாதித்து பெரும் இன்னலை சந்தித்து வந்தனர். இந்நிலையில் முன்பு எப்போதும் இல்லாத நிகழ்வாக ஜூன் 12 க்கு முன்பாக முதல் முறையாகயில் மேட்டூர் அணை கடந்த மே 24 -ம் தேதி பாசனத்துக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டது. மேலும் பொதுவாக 10 தினங்களுக்கு மேல் தண்ணீர் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வரும் நிலையில், இந்த ஆண்டு வாய்க்கால்கள் முறையாக தூர்வார பட்டதால் விரைவாக வந்தடைந்துள்ளது. 




காவிரி தண்ணீர் கடைமடை பகுதியான  மயிலாடுதுறை மாவட்ட எல்லையான திருவாலங்காடு காவிரி, விக்ரமன் ஆறுகளின் தலைப்பு பகுதியில் உள்ள நீர் தேக்கியில் தண்ணீர்  வந்தடைந்தது. அதனை தொடர்ந்து காவிரியில் முதல் கட்டமாக 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் வந்த காவிரி நீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் பூஜை செய்து மலர் தூவி வணங்கி வரவேற்றனர். அதனை தொடர்ந்து மயிலாடுதுறை அருகே தருமபுரத்தில்16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மை வாய்ந்த ஆதீனத் திருமடம் உள்ளது. 




சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் இந்த ஆதீனத்தின் மடாதிபதி 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மயிலாடுதுறையில் இருந்து  பூம்புகார் அருகே உள்ள மேலையூர் கடைசி கதவணைக்கு சென்ற காவிரி நீரை தருமபுரம் என்ற இடத்தின் காவிரி ஆற்று படுகையில் சென்ற நீரை ஆதீன மடாதிபதி சிறப்பு பூஜை செய்து மலர் மற்றும் நெல் மணிகளை தூவி வணங்கி வரவேற்றார்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற