தமிழ்நாட்டில் , வரும் 31 ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில், அன்றைய தினத்தில் மழை பெய்யுமா என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.


கிழக்கு திசை காற்றின் வேசு மாறுபாடு தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் , அடுத்த 7 தினங்களுக்கான வானிலை நிலவரம் குறித்து தெரிந்து கொள்வோம். 


28.10.2024 முதல் 30.10.2024 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


31.10. 2024: தீபாவளி தினம்:


 இன்றைய தினம் தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இன்றைய தினத்தில், தமிழ்நாட்டில் எந்தவொரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்படவில்லை என்ன என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் , தீபாவளி கொண்டாட்டத்திற்கு  இடையூறு இருக்க வாய்ப்பில்லை என்பதே தற்போதைய தகவலாக இருக்கிறது


01.11.2024 தமிழகத்தில் ஒருசில இடங்களில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்றைய தினம் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 


ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி திருப்பத்தூர், சேலம், திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


02.11.2024 மற்றும் 01.11.2024  தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பறிவை 26.- 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது அதிகபட்ச வெப்பநிலை 33-35  டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்க கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 



மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.