அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே... மார்கழி மாதத்தை பொறுத்தவரை உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் செவ்வாய் பகவான் பயணித்துக் கொண்டிருக்கிறார்... கடினமாக சில நேரங்களில் நண்பர்களிடத்தில் நாம் நடந்து கொண்டிருக்கலாம்.. அல்லது வாழ்க்கைத் துணையுடன் சிறு சிறு சண்டை சச்சரவுகள் கூட ஏற்படலாம்... ஆனால் செவ்வாய் பகவான் ஏழாம் வீட்டில் பயணிக்கும் இந்த காலகட்டத்தில்.. கோபப்படாமல் சற்று நிதானமாக பிரச்சனைகளை கையாள்வது நல்லது... எந்த காரியத்தையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இல்லாமல் எடுத்தோம் வெற்றி பெற்றோம் என்று இருக்க வேண்டும்... அந்த சிந்தனைகள் மனதிற்குள் வரக்கூடிய காலகட்டம் தான் இது...

Continues below advertisement

 வாழ்க்கைத் துணையின் மூலம் நல்ல பொருளாதார முன்னேற்றம் உயர்வு லைப் சப்போர்ட் என்று சொல்லுவார்களே ஆங்கிலத்தில் அதுபோல உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்... வாழ்க்கைத் துணையின் மூலம் சில மருத்துவ செலவுகள் கூட ஏற்படலாம்...

 குரு பகவான் உங்கள் ராசியிலேயே பயணித்துக் கொண்டிருக்கிறார்... 10 ஆம் வீட்டு அதிபதி ராசியில் அமர்ந்திருப்பது யோகமே... நாம் செய்கின்ற ஒவ்வொரு தவறுகளையும் சுட்டிக்காட்டி அதை திருத்தி அதன் மூலம் மிகப்பெரிய உயர்வுகளையும் ஏற்றங்களையும் பெற குரு பகவான் வழிவகை செய்வார்.... பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்க கூடிய ராகு பகவான் நடைமுறை காலகட்டத்தில் நாம் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்கள் மூலம் உங்களுக்கு நல்ல பாக்கிய அம்சங்களை கொண்டு வருவார்... பத்தாம் வீட்டில் பயணிக்கும் சனி பகவானால் உடனே நடக்கக்கூடிய காரியங்கள் சற்று தாமதப்பட்டாலும் கூட... லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வருவேன் என்று படத்தின் பஞ்ச் டயலாக் போல... தாமதமானாலும் சிறப்பாக வேலையை செய்து முடிப்பேன் என்று சனி பகவான் பத்தாம் பாவகத்தில் அமர்ந்திருக்கிறார்....

Continues below advertisement

 மூன்றாம் வீட்டில் கேது பகவான் அமர்ந்து... முயற்சிகளில் சற்று தடை தாமதத்தை கொண்டு வரலாம்.... எப்படி என்றால் சில சமயங்களில் நீங்கள் எதையாவது சாதிக்க வேண்டும் என்றால் அதற்கு முயன்று தான் ஆக வேண்டும் ஆனால் அப்படிப்பட்ட முயற்சிகள் எடுப்பதற்கு கூட சற்று தாமதத்தை கொடுத்தால் எப்படி? ஆகையால் நீங்கள் விநாயகரை வழிபட்டு உங்கள் முயற்சியை தொடங்குங்கள் அதில் வெற்றியை பெறுவீர்கள்...

 நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியங்கள் சில... இந்த மார்கழி மாதத்தில் உங்களுக்கு முடியும்... புதன் சுக்கிரன் போன்ற கிரகங்கள் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்து தொழில் ரீதியான சில சாதகமான பலன்களை கொண்டு வரும்... செவ்வாய் பகவான் உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு பயணித்து உச்சநிலையை அடைவார்.. வாழ்க்கை துணை மூலம் நல்ல தன லாபம்... கூட்டு வியாபாரத்தின் மூலம் வெற்றி போன்றவை நீங்கள் பெறலாம்.... மார்கழி மாதத்தை பொறுத்தவரை உங்களுக்கு சரணமே இல்லாமல் நகரும் மாதம்... பெரிதாக தடை தாமதங்கள் ஏற்பட்டால் உடனடியாக விநாயகரை சந்தித்து அவருக்கு விளக்கேற்றுங்கள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்...

 மனதை போட்டு குழப்பிக் கொண்டே இருப்பதால் என்ன நிகழ்ந்து விடப் போகிறது... புதிய முயற்சிகளில் ஈடுபடுங்கள் ராகு பகவான் உங்களுடைய ராசிக்கு பாக்கியஸ்தானத்தில் தான் அமர்ந்திருக்கிறார்... தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உங்கள் தொழிலில் நீங்கள் முன்னேறலாம்... வாழ்க்கையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இந்த மார்கழி மாதம் உங்களை விட்டு செல்லும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை...