அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே மார்கழி மாதம் உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்பதை பார்க்கலாமா? குரு பகவான் 12 ஆம் வீட்டில் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் நீங்கள் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்... நன்றாக பெயர் புகழோடு இருப்பவர்களுக்கு கூட சற்று இழுக்கு ஏற்படும் அளவிற்கு காரியங்கள் கை மீறிப் போகும்... ஆனால் நிதானத்தை மட்டும் இழந்து விட வேண்டாம்... எப்படி என்றால் அவமானப்படக்கூடிய சூழ்நிலை வந்தால் கூட அமைதியாக பொறுமையாக கையாள்வது நல்லது...
குரு பகவான் உங்களுடைய ராசிக்கு 12 ஆம் வீட்டில் பயணித்து எதிர்பாராத பயணங்கள் மூலம் திக்கு முக்காட வைப்பார்... கையில் வைத்திருக்கும் பணம் திடீரென்று செலவாக வாய்ப்புண்டு... நான் மேலே குறிப்பிட்ட அத்தனை காரியங்களும் குரு பகவான் 12 ஆம் வீட்டில் மார்கழி மாதத்தில் பயணிப்பதால் வரக்கூடிய நிகழ்வுகள்... இதை தவிர புதியதாக வண்டி வாகனம் வாங்கி மகிழ போகிறீர்கள்... வீடு நிலம் இடம் தொடர்பான அனைத்து காரியங்களும் உங்களுக்கு சாதகமாக முடியும்.... நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என்றிருந்த நண்பர்கள் மனதிற்கு இனிய சில சம்பவங்கள் நடைபெறும்.... பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டு....
பெரிய போராட்டமாக இருந்தாலும் கூட அதை எளிதாக கையாண்டு அதன் மூலம் வெற்றி அடைய அதிக சாத்தியக்கூறுகள் உண்டு... அஷ்டமஸ்தானத்தில் இருக்கக்கூடிய ராகு பகவான் உங்களுக்கு புரியாத சில புதிரான காரியங்களை புரிய வைப்பார்... உங்களை நீங்களே தொழிற்ப ரீதியாக அப்டேட் செய்து கொள்ளும் காலகட்டம்.... தூரதேசங்கள் மூலமாக உங்களுக்கு நன்மை வந்து சேரும்... அதாவது வெளியூர் வெளி மாநிலம் வெளிநாடு போன்ற இடங்களில் இருந்து உங்களுக்கு நல்ல தகவல்கள் வரும்...
சில இடங்களை சுற்றி பார்க்க வேண்டும் என்று...? மனதில் ஆசைப்பட்டீர்கள், தற்பொழுது அந்த பிரயாணத்திற்கான வழி வகைகள் உங்களுக்கு கண் முன்னால் தோன்றும்.... பிரயாணப்படுவதும் நல்லது.. திடீரென்று செலவுகள் ஏற்படுவதன் மூலம் சேமிப்பு கரையலாம்... அதற்காக கவலைப்பட வேண்டாம் ஒன்று இழந்து தான் மற்றொன்று பெற வேண்டும்.. வீட்டில் சுபகாரிய நிகழ்வுகளால் வீடு களைக்கட்டும்... கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்....
கடன்களால் பெரிய அவமானத்தை சந்தித்த கடக ராசி அன்பர்களே கடனைக் கொண்டு வரக்கூடிய குருபகவான் உங்கள் வீட்டிற்கு 12 ஆம் வீட்டில் மறைந்து விடுகிறார் அப்படி என்றால்... எதிரிகள் எல்லாம் உங்கள் முன்னால் வந்து நிற்பதற்கு கூட சக்தி அற்றவர்களாக மாறிவிடுவார்கள்... நீங்களே சக்தி சாதிகளாக இருந்து எதிரிகளைப் பந்தாடுவீர்கள்.... எவ்வளவு பெரிய பிரச்சனைகள் வந்தாலும் அதை அசால்டாக கையாளும் திறன் உங்களுக்கு கிடைக்கும்... மருந்து மாத்திரைகள் மூலமாக நீண்ட நாள்களாக ஏற்பட்ட நோய்களுக்கு வைத்தியம் பார்க்கலாம்... இரண்டாம் வீட்டில் இருக்கும் கேது பகவான் பேச்சை குறைத்து செயலில் உங்கள் திறனை காட்ட வைப்பார்.. எதிர்காலம் தொடர்பான பயம் உங்களுக்கு வரும்...
2025 முடிந்து 26க்குள் நீங்கள் பிரவேசிக்கும் இந்த காலகட்டத்தில் இருவகையாக 2025 சென்றது...... ஆனால் 2026 மிகச் சிறப்பாக இருக்கும்... ஆஞ்சநேயர் வழிபாடு உங்களுக்கு மிகுந்த ஏற்றத்தை கொண்டு வரும் காரணம் இரண்டாம் வீட்டில் கேது பகவான் அமர்ந்திருக்கிறார் அதேபோல் மூன்றாம் வீட்டு அதிபதியான புதன் பகவானும் உங்களுக்கு நல்ல நிலையில் பயணிக்கிறார்... செவ்வாய் பகவான் உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்து தொழில் ரீதியான பல முன்னேற்றங்களை கொண்டு வருவார்.... நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய மாதம்...!!!