திருச்சி: ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா ரயில் நிலைய யார்டில் தண்டவாள மறுசீரமைப்பு மற்றும் மின்னணு இன்டர்லாக்கிங் பணிகள் நடைபெற உள்ளதால், டிசம்பர் மாதத்தில் புதுச்சேரி, காரைக்கால், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்படும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 10 ரயில்கள் குறிப்பிட்ட தேதிகளில் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளன. மேலும், ஒரு ரயில் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே திருச்சிராப்பள்ளி கோட்டம் அறிவித்துள்ளது.
48 நாட்கள் நடைபெறும் பராமரிப்புப் பணிகள்!
குண்டக்கல் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கூடூர் – ரேணிகுண்டா – திருப்பதி ரயில் வழித்தடத்தில் அமைந்துள்ள ரேணிகுண்டா ரயில் நிலைய யார்டில் தண்டவாள மறுசீரமைப்பு மற்றும் மின்னணு இன்டர்லாக்கிங் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதற்காக முன் இன்டர்லாக்கிங் மற்றும் இன்டர்லாக்கிங் பணிகள் என மொத்தம் 48 நாட்களுக்கு பணிகள் நடைபெற உள்ளன.
இதன் காரணமாக டிசம்பர் மாதத்தில் குறிப்பிட்ட தேதிகளில் இயக்கப்படும் சில ரயில்கள் வழக்கமான பாதையில் இயக்கப்படாமல் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மாற்றுப் பாதையில் இயக்கப்படும் ரயில்கள் விவரம்:
1. புதுச்சேரி – ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 12868)
புதுச்சேரியில் இருந்து பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில், டிசம்பர் 16 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.
அதன்படி, காட்பாடி சந்திப்பு, அரக்கோணம் சந்திப்பு, பெரம்பூர், கூடூர் வழியாக இயக்கப்படும். இதனால் திருப்பதி மற்றும் ரேணிகுண்டா ரயில் நிலையங்களில் இந்த ரயில் நிற்காது.
2. திருநெல்வேலி – ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 16787)
திருநெல்வேலியில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில், டிசம்பர் 14 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.
காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், கூடூர் வழியாக இயக்கப்படும். இதனால் சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது.
3. ஹைதராபாத் – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 17069)
ஹைதராபாத்தில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில், டிசம்பர் 9, 16 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.
கூடூர், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி வழியாக இயக்கப்படும். இதனால் ரேணிகுண்டா, திருப்பதி, பாகாலா, சித்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது.
4. கன்னியாகுமரி – ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 17070)
கன்னியாகுமரியில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில், டிசம்பர் 11, 18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.
காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், கூடூர் வழியாக இயக்கப்படும். இதனால் சித்தூர், பாகாலா, திருப்பதி, ரேணிகுண்டா ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது.
5. சார்லப்பள்ளி – திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 17077)
சார்லப்பள்ளியில் இருந்து மாலை 5.20 மணிக்கு புறப்படும் இந்த ரயில், டிசம்பர் 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.
கூடூர், பெரம்பூர், அரக்கோணம் வழியாக இயக்கப்படும். இதனால் ரேணிகுண்டா, திருப்பதி, சித்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது.
6. திருச்சிராப்பள்ளி – சார்லப்பள்ளி எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 17078)
திருச்சிராப்பள்ளி சந்திப்பில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், டிசம்பர் 9, 16 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.
காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், கூடூர் வழியாக இயக்கப்படும். இதனால் சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது.
7. நரசாபூர் – திருவண்ணாமலை எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 17291)
நரசாபூரில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு புறப்படும் இந்த ரயில், டிசம்பர் 9, 16 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.
கூடூர், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி வழியாக இயக்கப்படும். இதனால் ரேணிகுண்டா, திருப்பதி, சித்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது.
8. திருவண்ணாமலை – நரசாபூர் எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 17292)
திருவண்ணாமலையில் இருந்து காலை 11 மணிக்கு புறப்படும் இந்த ரயில், டிசம்பர் 10, 17 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.
காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், கூடூர் வழியாக இயக்கப்படும். இதனால் சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது.
9. லோகமான்ய திலக் டெர்மினஸ் – மதுரை எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 22101)
மும்பை லோகமான்ய திலக் டெர்மினஸில் இருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில், டிசம்பர் 9, 16 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.
கூட்டி, தர்மாவரம், கிருஷ்ணராஜபுரம், அரக்கோணம் வழியாக இயக்கப்படும். இதனால் கடப்பா, ராசம்பேட்டை, ரேணிகுண்டா, திருத்தணி ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது.
10. லோகமான்ய திலக் டெர்மினஸ் – காரைக்கால் எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 11017)
லோகமான்ய திலக் டெர்மினஸில் இருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில், டிசம்பர் 12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.
கூட்டி, தர்மாவரம், கிருஷ்ணராஜபுரம், அரக்கோணம் வழியாக இயக்கப்படும். இதனால் தடிபத்திரி, எர்ரகுண்ட்லா, கடப்பா, ராசம்பேட்டை, ரேணிகுண்டா ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது.ஒரு ரயில் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் தாமதம்!மாற்றுப் பாதையில் இயக்கப்படும் ரயில்கள் மட்டுமின்றி, மற்றொரு ரயிலின் பயண நேரத்திலும் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் – திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 19419)
அகமதாபாத்தில் இருந்து காலை 9.20 மணிக்கு புறப்படும் இந்த ரயில், டிசம்பர் 10, 17 மற்றும் 24 ஆகிய தேதிகளில் வழித்தடத்தில் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் தாமதப்படுத்தி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணிகள் கவனத்திற்கு!
ரேணிகுண்டா ரயில் நிலைய யார்டில் நடைபெற உள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக, குறிப்பிட்ட தேதிகளில் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள பயணிகள் தங்களது ரயில் இயக்க விவரங்களை முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக புதுச்சேரி, காரைக்கால், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பயணம் மேற்கொள்ளும் பயணிகள், திருப்பதி, ரேணிகுண்டா உள்ளிட்ட ரயில் நிலையங்களில் குறிப்பிட்ட ரயில்கள் நிற்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த ரயில் சேவை மாற்றங்கள் தொடர்பான அறிவிப்பை தெற்கு ரயில்வே திருச்சிராப்பள்ளி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ளார்.
