பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 10-ஆம் தேதி விருச்சிக லக்கினத்தில் அண்ணாமலையார் சன்னதி எதிரே உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள மூன்றாம் பிரகாரத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் காலையில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அதன் பின்பு கோவில் ஊழியர்கள் தோளில் சுமந்தவாறு ஐந்தாம் பிரகாரத்தில் பவனி வரும் பூஜைகள் நடைபெற்றன. அதன் பின்னர் இரவு திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர் ,முருகர், வள்ளி ,தெய்வானை ,உண்ணாமுலை அம்மனுடன் அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ,அலங்காரம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டு ஐந்தாம் பிரகாரத்தில் பவனி நடைபெற்றது. தொடர்ந்து 10 நாட்கள் பவனி நடைபெற்றது. இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் சுவாமி சிலைகள் அலங்கரிக்கப்பட்டன.
அதனைத்தொடர்ந்து நவம்பர் 19-ஆம் தேதி அதிகாலை அண்ணாமலையார் கோவில் கருவறையில் பரணி தீபம் ஏற்றப்பட்டு, அதனை தொடர்ந்து அன்று மாலை கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயரம் கொண்ட மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீப திருவிழாவை கொரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை கட்டளைதாரர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மகா தீபத் திருவிழா நிறைவடைந்த நிலையில் தற்பொழுது தெப்பல் உற்சவம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வருகை தந்து அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு வருகை தந்த துர்கா ஸ்டாலினுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கும்ப மரியாதை வழங்கப்பட்டது. சாமி தரிசனத்தின் போது உடன் தரிசனம் செய்த பக்தர்கள் உடன் கைகொடுத்து அவர்களுடன் உரையாடினார்.
லைஃப்ஸ்டைல் செய்திகளைப் படிக்க: