கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே செம்மங்குப்பம் அருகே ரயில் மீது பள்ளி வேன் மோதியதில் வேனில் பயணித்த மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடலூர் கோர விபத்து:
இந்த சம்பவத்தில் மேலும் மக்களை சோத்தில் ஆழ்த்தும் விதமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களான அக்கா - தம்பி இருவரும் உயிரிழந்துள்ளனர். கடலூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற பள்ளி வேனில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திராவிட மணி என்பவரின் மகள் சாருமதியும், மகன் செழியனும் பள்ளிக்குச் சென்றுள்ளனர்.
3 பேர் மரணம்:
இந்த விபத்தில் மிகவும் மோசமாக காயம் அடைந்து உடல் சிதறி நிமலேஷ் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். பின்னர், படுகாயம் அடைந்த சாருமதி, செழியன் ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பியுள்ளனர். ஆனால், மருத்துவமனையில் சாருமதி கொண்டு சென்ற நிலையில் அவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அக்கா, தம்பி மரணம்:
இதையடுத்து, படுகாயத்துடன் அவதிப்பட்டு வந்த செழியனை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இந்த கோர விபத்தில் உயிரிழந்த சாருமதியும், செழியனும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, தம்பி என்பது மிகப்பெரிய சோகம் ஆகும்.
இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்காவும், தம்பியும் கோர விபத்திற்கு தங்கள் உயிரைப் பறிகொடுத்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த கடலூரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஒரு மாணவருக்கு தீவிர சிகிச்சை:
மேலும், சம்பவ இடத்திலே உயிரிழந்த நிமலேஷின் சகோதரர் விமலேஷ் கடலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் அலட்சியமாக செயல்பட்ட கேட்கீப்பர் பங்கஜ்சர்மாவை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். அவர் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், தமிழக போலீஸ் ஐஜி உமாவும் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார். இந்த கோர விபத்தில் ரயில் மீது மோதிய வேகத்தில் பள்ளி வேன் 50 மீட்டர் தொலைவிற்கு இழுத்துச் செல்லப்பட்டது. பள்ளி வேன் இந்த விபத்தால் அப்பளம் போல உருக்குலைந்தது. இந்த விபத்தில் காயம் அடைந்த ஓட்டுனருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்துக்கு காரணமானவர் என்று கூறப்படும் கேட்கீப்பர் பங்கஜ்சர்மாவை அப்பகுதி மக்கள் அடித்து உதைத்தனர். அவர் ரயில் கேட்டை கடக்கும் சமயத்தில் தூங்கியதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், ஓட்டுனரின் வற்புறுத்தலின் பேரிலே கேட் திறக்கப்பட்டதாக சிலர் தகவல்கள் தெரிவித்துள்ளனர்.