கடலூர் மாநகர மேயர் ஆன சுந்தரி - எதிர்த்து போட்டியிட்ட திமுக கவுன்சிலரின் கணவர் தற்கொலை முயற்சி

திமுக கவுன்சிலர் கீதாவின் கணவரும் கடலூர் திமுக மாவட்ட பொருளாளரும் ஆன குணசேகரன் தூக்க மாத்திரை சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதி

Continues below advertisement
தமிழகத்தில் கடந்த மாதம் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதனிடையே கடலூர் மாவட்ட மாநகராட்சி தேர்தலில், 45 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 286 பேர் போட்டியிட்டனர். இதில் 27 வார்டுகளில் திமுக, அதன் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் 3 வார்டுகளிலும், தமிழக வாழ்வுரிமை கட்சி 3 வார்டுகளிலும், காங்கிரஸ் ஒரு வார்டு என திமுக கூட்டணி கட்சிகள் 34 வார்டுகளில் வெற்றி பெற்றது. அதிமுக 6, பாமக., பாஜக தலா ஒன்று, சுயேச்சை 3 வார்டுகளில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணி 34 வார்டுகளில் வென்றுள்ள நிலையில், திமுக 27 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இரு தினங்களுக்கு முன்னர் மாநகராட்சி ஆணையாளர் முன்னிலையில் பதவியேற்றனர். இந்த நிலையில் கடலூர் மாநகராட்சியில் போட்டியிடும் மேயர் மற்றும் துணை மேயர் வேட்பாளர்களை திமுக தலைமை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதில் மேயர் பதவிக்கு 20-வது வார்டின் திமுக கவுன்சிலர் சுந்தரி என்பவரை திமுக தலைமை அறிவித்த நிலையில் துணை மேயர் பதவியை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கியது.  துணை மேயர் வேட்பாளராக விசிகவின் 34-வது வார்டு கவுன்சிலர் தாமரைச்செல்வன் அறிவிக்கப்பட்டார்.
 

 
இதற்கிடையே நேற்று மாலை திமுகவை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் காணவில்லை. அவர்களது தொலைபேசி எண்களும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மரக்காணம் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் திமுகவை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் தங்க வைக்கப்பட்டது தெரியவந்தது. இதில் சுமார் 4 கவுன்சிலர்கள் அங்கிருந்து மீண்டு மறைமுக தேர்தலில் பங்கேற்றனர். இந்த சூழலில் இன்று நடைபெற்ற மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலுக்கான வேட்புமனுவை திமுக தலைமை தேர்வு செய்த வேட்பாளர் சுந்தரி ராஜாவும் அவருக்கு எதிராக திமுக 2வது வார்டு கவுன்சிலர் கீதா குணசேகரன் ஆகிய இருவர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
 

 
இதையடுத்து இந்த மறைமுக தேர்தலில் 45 கவுன்சிலர்களில், 32 பேர் மட்டுமே வாக்கெடுப்பில் பங்கேற்றனர். அதிமுகவை சேர்ந்த 6 கவுன்சிலர்க மறைமுக தேர்தலுக்கு வராமல் புறக்கணித்தனர். மேலும் திமுகவை சேர்ந்த 7 கவுன்சிலர்கள் தனியார் நட்சத்திர விடுதியில் இருந்ததால் வாக்களிப்பில் பங்கேற்க முடியவில்லை. இதையடுத்து நடைபெற்ற மேயர் தேர்தலுக்கான மறைமுக தேர்தலில், திமுக தலைமை தேர்வு செய்த வேட்பாளர் சுந்தரிக்கு 19 பேர் வாக்களித்தனர். அவரை எதிர்த்து போட்டியிட்ட மற்றொரு திமுக கவுன்சிலர் கீதா குணசேகரனுக்கு ஆதரவாக 12 பேர் வாக்களித்தனர். இதையடுத்து 19 வாக்குகள் அதிக பெற்ற திமுக வேட்பாளர் சுந்தரி ராஜா மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடலூர் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற தேர்தலில், கடலூர் மாநகராட்சியின் முதல் மேயராக சுந்தரி ராஜா தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 
"முதல்வர் ஸ்டாலின் மற்றும் வேளாண் மற்றும் உழவர் நலன் அமைச்சர் பன்னீர்செல்வத்தின் ஆதரவால் மேயராக பொறுப்பேற்றுள்ளேன். தனக்கு வாக்களித்த மக்களுக்கு முறையாக பணி செய்து, கடலூர் மாநகராட்சியை முன்மாதிரி மாவட்டமாக கொண்டுவரும் முயற்சியில் ஈடுபடுவேன்" என்று மேயர்‌ சுந்தரி ராஜா தெரிவித்துள்ளார். இதன் இடையே 2 ஆவது வார்டில் அவை நடைபெற்ற திமுக கவுன்சிலர் கீதாவின் கணவரும் கடலூர் திமுக மாவட்ட பொருளாளரும் ஆன குணசேகரன் தூக்க மாத்திரை சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Continues below advertisement
Sponsored Links by Taboola