Crime: காதலுக்காக 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய்.. கிருஷ்ணகிரியில் கொடூரம்.. நடந்தது என்ன?

Crime: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 குழந்தைகளுக்கு பெற்ற தாயே விஷம் கொடுத்ததில், 9 மாத பெண் குழந்தை உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

Crime: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 குழந்தைகளுக்கு பெற்ற தாயே விஷம் கொடுத்ததில், 9 மாத பெண் குழந்தை உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே போடம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ் (27), இவர் கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஞானமலர்(21).  இவர்களுக்கு 2 வயதில் மகனும், 9 மாத பெண் குழந்தையும் உள்ளது. 

இந்நிலையில், ஞானமலர் என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த விவசாயி தங்கராஜ்க்கும் (28) தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதையறிந்த கணவர் மாதேஷ், அவருடன் பேசுவதை கைவிடும்படி மனைவியை கண்டித்துள்ளார். கணவர் சொன்னதை கேட்காமல் அவர் தங்கராஜுடன் பழங்கி வந்ததாக கூறப்படுகிறது. பின்பு கணவர் தட்டிக் கேட்டி மனைவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சில நாட்களாகவே இருவருக்கு பிரச்னைகள் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த ஞானமலர், தங்கராஜிடம் தெரிவித்துள்ளார். அவர், குழந்தைகள் இருப்பது தங்களுக்கு இடையூறாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து தங்கராஜ் கூறியப்படி, ஞானமலர், குழந்தைகள் 2 பேருக்கும் எலி மருந்தை சாப்பிடக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதை சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர்.  இதையறிந்த அக்கம் பக்கத்தினர் அந்த பெண்ணிடம் வந்த விசாரித்தனர். அவர் நடந்ததை கூற மறுத்துவிட்டார். உண்மை வெளியே தெரிந்துவிடும் என்ற பயத்தில் ஞானமலரும் விஷம் குடித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் 2 குழந்தைகள் மற்றும் அந்த பெண்ணையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இருக்கும் மருத்துவர்கள் இதில் 9 மாத குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இது குறித்து கணவர் மாதேஷ் ராயக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். புகாரின்படி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் ஞானமலர் மற்றும் தங்கராஜ் ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சிகிச்சை முடிந்ததும் ஞானமலரை கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.  மேலும் தலைமறைவாக உள்ள தங்கராஜை தேடி வருகின்றனர். 2 குழந்தைகளுக்கு பெற்ற தாயே விஷம் கொடுத்ததில், 9 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க

Crime : ஒரே நாளில் 10 திருடர்கள் கைது: 114 சவரன் நகை பறிமுதல் - கோவையில் போலீசார் அதிரடி

TN Rains: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை..? வெயில்..? வானிலை தகவல்கள் இதோ!

Continues below advertisement
Sponsored Links by Taboola