Crime: ஓசூரில் 15 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர்கள் 2 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராயக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவிபாளையத்தை  சேர்ந்த அருண்குமார் (27) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.
அருண்குமார் என்பவர் கேரளா மாநிலத்தில் உள்ள ஒரு பேக்கரி கடையில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சிறுமி திருமணத்திற்கு தாய் உஷா மற்றும்  அவரது சகோதரர் அஜித்குமார் உடந்தையாக இருப்பது தெரியவந்துள்ளது.


இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 10-ஆம் தேதி அன்று அந்த சிறுமிக்கு கணவரான அருண்குமார் வீட்டில் இருந்து மாயமானார்.  இது குறித்து அந்த சிறுமியின் பெற்றோர்கள் ஓசூர் அனைத்து மகளிர் காவல்நிலையில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வந்தனர். ஓசூர் ராஜகணபதி நகரைச் சேர்ந்த நவின்குமார்(21) என்பவர் அந்த சிறுமியை ஏற்கனேவே காதலித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமி மாயமான அதே நாளில் நவின்குமார் என்பவருடம் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த சிறுமியை திருமணம் செய்த நவீன்குமார் மற்றும் கடத்திச் சென்று திருமணம் செய்த நவீன்குமார் ஆகியோரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.


இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அரக்கேறி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கூட இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. அதன்படி, தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியை அடுத்த உப்பாரஹள்ளியைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமி 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். மேற்கொண்டு படிக்காமல் வீட்டில் இருந்து வந்த நிலையில் சிறுமியின் தந்தை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால் தாயாருடன் தனியாக வசித்து வந்த சிறுமியை கடந்த 2020 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் மொட்டையன் என்பவரது மகனான விஜய் திருமணம் செய்ய விரும்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் தாயிடன் சென்று பெண் கேட்டுள்ளார். 


அதற்கு அவர் சிறுமிக்கு 16 வயது தான் ஆவதாகவும், 18 வயது பூர்த்தி அடைந்ததாகவும் பேசிக் கொள்ளலாம் என கூறி பெண் தர மறுத்துள்ளார். ஆனால் சில மாதங்களுக்கு முன் சிறுமியிடன் விஜய் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய அச்சிறுமியை வீட்டை விட்டு அழைத்து சென்று விஜய் திருமணம் செய்துள்ளார். பின்னர் திருப்பூரில் இருவரும் குடும்பம் நடத்தி  வந்துள்ளனர். பின்னர் சில மாதங்களுக்கு முன் விஜய்யும் அச்சிறுமி சொந்த ஊருக்கு வந்தனர். உப்பாரஹள்ளியில் கூலி வேலைக்கு சென்று வந்த நிலையில் தம்பதியினர் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 


இதற்கிடையில் அச்சிறுமிக்கும், அவரது தாயாருடன் கூலி வேலை செய்து வந்த பூபது என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் அடிக்கடி போனிலும், நேரிலும் பேசி வந்துள்ளனர். இதனையறிந்த விஜய் சிறுமியை கண்டித்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை 15 ஆம் தேதி  பூபதி,  சிறுமியை ஓசூருக்கு அழைத்து சென்றுள்ளார். அங்குள்ள முருகன் கோயில் ஒன்றில் வைத்து சிறுமியை திருமணம் செய்துள்ளார்.  மேலும் இதனை அறிந்த விஜய் போலீசார் புகார் அளித்தார்.  புகாரின்படி குழந்தை திருமணம் மற்றும் போக்சோவில் விஜய், பூபதி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.