மேலும் அறிய

சுடுகாடு பிரச்சினை: கோட்டகுப்பத்தில் மீனவப் பெண்கள் கழுத்தில் கயிறு கட்டி தற்கொலை முயற்சி போராட்டம் - கடலோரக் கிராமத்தில் பெரும் பதற்றம்!

மீனவப் பெண்கள் கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டிக்கொண்டு கடலில் இறங்கி தற்கொலை மிரட்டல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடலோரப் பகுதியில் பெரும் பரபரப்பு!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் நகராட்சிக்குட்பட்ட நடுகுப்பம் கிராமத்தில், சுடுகாடு நிலம் தொடர்பான இருதரப்புப் பிரச்சினையில் அரசு அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டி, மீனவப் பெண்கள் கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டிக்கொண்டு கடலில் இறங்கி தற்கொலை மிரட்டல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடலோரப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நீண்ட நாள் சர்ச்சை:

கோட்டகுப்பம் நடுகுப்பம் கிராமத்தில் வசிக்கும் மீனவ சமூகத்தினருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிடர் சமூக மக்களுக்கும் இடையே சுடுகாட்டுப் பாதை மற்றும் நிலம் தொடர்பாக நீண்ட காலமாகவே எல்லைப் பிரச்சினை நிலவி வருகிறது. குறிப்பாக, ஆதிதிராவிடர் மக்களுக்குச் சொந்தமான சுடுகாட்டுப் பகுதிக்கு அருகே மீனவர்கள் தங்களது மீன்பிடிப் படகுகள் மற்றும் வலைகளை நிறுத்தி வைப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகளும், மோதல்களும் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

தோல்வியில் முடிந்த அமைதிப் பேச்சுவார்த்தை:

இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், நேற்று மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் இருதரப்புப் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய அமைதிப் பேச்சுவார்த்தைக் கூட்டம் நடைபெற்றது. எனினும், இருதரப்பிலும் உடன்பாடு எட்டப்படாததால் எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இது மீனவ கிராம மக்களிடையே கடும் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.

கழுத்தில் கயிறுடன் கடலில் இறங்கிய பெண்கள்:

அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அரசு அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் ஆதிதிராவிடர் மக்களுக்கு ஆதரவாக, தங்களுக்கு எதிராகச் செயல்படுவதாக நடுகுப்பம் மீனவ மக்கள் குற்றம் சாட்டினர்.

இதனால் ஆத்திரமடைந்த மீனவப் பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், இன்று திடீரென தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் தங்களது கழுத்துகளில் தூக்குக் கயிறுகளை மாட்டிக்கொண்டு, "எங்களுக்கு நீதி வேண்டும்" என முழக்கமிட்டபடி கடலுக்குள் இறங்கி தற்கொலை செய்து கொள்ள முயன்றனர்.

போலீசாருடன் வாக்குவாதம் - படகுகள் மீது ஏறி போராட்டம்:

அங்கு அசம்பாவிதங்களைத் தடுக்க ஏற்கனவே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கோட்டகுப்பம் காவல்துறையினர், உடனடியாகக் கடலுக்குள் பாய்ந்து சென்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்களைப் பலவந்தமாகத் தடுத்து நிறுத்தி கரைக்கு இழுத்து வந்தனர். அப்போது காவல்துறையினருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட மீனவ மக்களுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளும், வாக்குவாதமும் ஏற்பட்டது.

காவல்துறையினர் கடலுக்குள் செல்ல விடாமல் தடுத்ததால், போராட்டக் களத்தை மாற்றிய மீனவப் பெண்களும் கிராம மக்களும், கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தங்களது மீன்பிடிப் படகுகளின் மீது ஏறி அமர்ந்து கொண்டு தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸ் குவிப்பு - அதிகாரிகள் சமாதானம்:

மீனவ மக்களின் இந்தத் தொடர் போராட்டத்தால் நடுகுப்பம் கடற்கரை கிராமமே போர்க்களமாகத் காட்சியளித்தது. அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய்த்துறை மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவ மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். "இந்தப் பிரச்சினைக்குச் சட்டப்பூர்வமாக, இருதரப்பும் ஏற்கும் வகையில் விரைவில் சுமுகமான தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். எனினும், கிராமத்தில் இன்னும் பதற்றமான சூழலே நிலவி வருகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை அரசுப் பொருட்காட்சி: மக்கள் கூட்டம் அலைமோதுகிறது! பல லட்சம் வருவாய் ஈட்டி சாதனை!
மதுரை அரசுப் பொருட்காட்சி: மக்கள் கூட்டம் அலைமோதுகிறது! பல லட்சம் வருவாய் ஈட்டி சாதனை!
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
6 மாதத்தைக் கூட தாண்ட மாட்டார்கள்! - புதுச்சேரி அரசுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல காங்கிரஸ் முடிவு!
6 மாதத்தைக் கூட தாண்ட மாட்டார்கள்! - புதுச்சேரி அரசுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல காங்கிரஸ் முடிவு!
தரையில் அமர்ந்த அமைச்சர்... குழாயில் நீர் பருகிய எளிமை... விழுப்புரத்தில் அமைச்சர் என். ஆனந்த் அதிரடி ஆய்வு!
தரையில் அமர்ந்த அமைச்சர்... குழாயில் நீர் பருகிய எளிமை... விழுப்புரத்தில் அமைச்சர் என். ஆனந்த் அதிரடி ஆய்வு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget