தமிழகத்தில் ஜனவரி 25ம் தேதி கொரோனா 3வது அலை உச்சத்துக்கு செல்லும் (Covid peak) எனவும், அதன்பின், தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கும் எனவும் கணிக்கப்படுகிறது.
மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில், சில தினங்களுக்கு முன்னதாக கொரோனா அலை தனது உச்சக்கட்ட பாதிப்பை அடைந்தது. மும்பையில் தொடர்ச்சியாக நான்காவது நாளாக ஒவ்வொரு நாளும் தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது.
மும்பை தினசரி பாதிப்பு: (ஜனவரி 12 அன்று உச்சத்துக்கு சென்றது)
ஜனவரி 12 | 17087 |
ஜனவரி 13 | 13069 |
ஜனவரி 14 | 10765 |
ஜனவரி 15 | 10186 |
அதேபோன்று, டெல்லி பெருநகரத்திலும் கொரோனா மூன்றாவது அலை உச்சத்தை அடைந்ததாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா வைரஸின் தன்மை,தொற்றுப் பரவல் இயக்கவியல், தடுப்பூசிகள் செலுத்துதல், ஊரடங்கு போன்ற மருந்து அல்லாத தலையீடுகள் போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் கோவிட்-19 அலையின் உச்சக் காட்ட பாதிப்பு (Covid-19 Peak) அமைகிறது. கணித மாதிரியின் (Mathematical Modelling) துணைக் கொண்டு கொரோனா பரவல் போக்கினை இந்திய விஞ்ஞானிகள் கணக்கிடு வருகின்றனர்.
கான்பூர் ஐஐடி போராசிரியர், மனிந்ரா அகர்வால் தனது ட்விட்டர் குறிப்பில் பின்வரும் தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், தமிழகத்தில் வரும் ஜனவரி 25ம் தேதி முதல் கொரோனா அலை உச்சத்துக்குச் செல்லும்.
உச்சக்கட்ட பாதிப்பு நாளன்று, பாதிப்பு எண்ணிக்கை சுமார் 65 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கலாம் என்று கணித்தோம். ஆனால், கொரோனா பரிசோதனை யுக்தியில் சில அடிப்படை மாற்றங்கள் செய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை பல்மடங்கு குறையலாம் என்பது தெளிவாகத் தெரிகிறது" என்று தெரிவித்தார்.
மேலும், தேசிய அளவில் ஜனவரி 23ம் தேதியன்று கொரோனா மூன்றாவது அலை உச்சத்துக்கு செல்லும். அன்றைய தினத்தில், நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 23,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு, முந்தைய நாளை விட (சனிக்கிழமை) இது 14 குறைவாகும். கடந்த ஒரு வாரத்தில் மட்டும், தமிழ்நாட்டின் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 240% அதிகரித்துள்ளது.
முன்னதாக, மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து 10 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு இம்மாத இறுதிவரை விடுமுறை அறிவிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்ததுது. 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு வரும் 19 ஆம் தேதி தொடங்கி நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வுக்கான புதிய தேதி குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.