தமிழகத்தில் வேகமாக அதிகரித்து வரும் கோவிட் பரவலை கட்டுப்படுத்தும் விதத்தில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. 


சென்னை, செங்கல்பட்டு, கோவை, காஞ்சிபுரம், நெல்லை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,987 பேருக்கு தமிழகத்தில்  நோய்த் தொற்று கண்டறியப்பட்டது.    


கொரோனா பரிசோதனைகளை அதிகரிப்பது, தனிமை பகுதிகளை உருவாக்குவது, தடுப்பூசி திட்டத்தை வேகப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.