விஜய்க்கு ஷாக்.! கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு தற்காலிக அரசு பணி.! ட்விஸ்ட் கொடுத்த நீதிமன்றம்
கரூரில் கூட்ட நெரிசலில் இறந்தோர் குடும்பத்தினருக்கு தற்காலிகமாகவே பணி ஆணை வழங்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து தமிழக அரசு சார்பாக 10 லட்சம் ரூபாயும், தவெக சார்பாக 20 லட்சம் ரூபாயும் நிதி உதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்ற நிலையில், முதலமைச்சராக விஜய் பதவியேற்றுள்ளார். இதனையடுத்து கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டது.
கரூர்- 32 பேருக்கு அரசு பணி
இதனையடுத்து முதலமைச்சர் விஜய் இன்று கரூரில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். இந்த நிகழ்வில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த 32 பேருக்கு அரசு வேலையானது வழங்குகிறார். இதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற போது கருணைப்பணி வழங்குவது விதிகளுக்கு எதிரானது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
தற்காலிக பணி ஆணை
இதற்கு பதில் அளித்த அரசுத்தரப்பு, தூத்துக்குடி ஸ்டெர்லைச் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு அரசுப்பணி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், அரசின் கொள்கை தொடர்பான முடிவில் தலையிட விரும்பவில்லையெனவும், இன்றைய பணி நியமன நிகழ்வு நடைபெறலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்காலிகமாகவே பணி ஆணை வழங்கப்பட வேண்டும் என தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை ஜூலை 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் டிஎன்பிஎஸ்சியை தானாக முன்வந்து நீதிபதி சேர்த்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















