செங்கல்பட்டு: சத்யசாய் மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள், ஊழியர்கள் என கொரோனா பாதிப்பு 72 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். நான்கு நாட்களில் 972 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 72 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 


முன்னதாக, கடந்த 6 ம் தேதி சத்யசாய் மருத்துவ கல்லூரியில் 25 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கிய நிலையில் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று கண்டறியப்பட்டது. கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 25 மாணவர்களுக்கு லேசான அறிகுறிகள் உள்ளதால் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண