சென்னையில் 10க்கு மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அசோக் ரெசிடென்ஸி, ஆதித்யராம், அம்பாலால் உள்ளிட்ட 4 குழுமங்களுக்கு சொந்தமான 60 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.    சென்னையில் அண்ணாநகர்,மணலி, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம் ஆகிய இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். 


சென்னை அண்ணா நகரில் உள்ள அசோக் ரெசிடன்சி ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அண்ணா நகர் 6வது அவென்யூவில் உள்ள உள்ள ஹோட்டல் உரிமையாளர் வீட்டிற்கு 4 வாகனங்களில் வந்த 10 க்கும் மேற்பட்ட வருமான வரித்தூறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


இதேபோல் வேலூரில் குடியாத்தம் நகை கடை பஜார், சந்தைபேட்டை பகுதிகளில் உள்ள அம்பாலால் குழுமத்திற்கு சொந்தமான கடை, வீடு, அலுவலகம் ஆகிய பகுதிகளிலும், வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள வீட்டு உபயோக பொருட்கள் கடையிலும், வேலூர் ஓல்ட் பைபாஸ் சாலையில் உள்ள அம்பலால் குழுமத்திற்கு சொந்தமான விஐபி சிட்டி அலுவலகத்திலும் வருமானவரித்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது.


வருமான வரித்துறையினரின் சோதனையை தொடர்ந்து அடையாள அட்டை இருக்கும் பணியாளர்களை தவிர  வெளி நபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் உள்ளே இருந்தவர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை, 


மேலும் திருநெல்வேயில் முக்கூடலில் உள்ள மார்த்தாண்டத்தைச் சேர்ந்த கே.கே.எம் நிறுவனத்துக்கு சொந்தமான கல்குவாரிகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.