Keezhadi: கீழடி 9ம்  கட்ட அகழாய்வில் வண்ண வண்ண பாசி, வட்டசில்லு கண்டெடுப்பு.. தீவிரமாகும் அகழாய்வு பணிகள்..

கீழடி 9-ம் கட்ட அகழாய்வில் வண்ண வண்ண பாசி மணிகள், வட்டசில்லுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Continues below advertisement

கீழடி 9-ம் கட்ட அகழாய்வில் வண்ண வண்ண பாசி மணிகள், வட்டசில்லுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 9ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த 6ம் தேதி முதல்வர் ஸ்டாலின் அவர்களால் காணொலி மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழக தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம், இணை இயக்குனர் (கீழடி தளம்) ரமேஷ், தொல்லியல் ஆய்வாளர்கள் அஜய், காவ்யா தலைமையில் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.

Continues below advertisement

வழக்கமாக அகழாய்வு பணிகள் ஜனவரியில் தொடங்கி செப்டம்பர் வரை நடைபெறும், இந்தாண்டு அருங்காட்சியகத்தில் பொருட்களை காட்சிப்படுத்தும் பணி நடந்து வந்ததால் பணிகள் தாமதமாக தொடங்கப்பட்டுள்ளது. வழக்கமா பத்து குழிகள் மட்டும் தோண்டப்படும், இந்தாண்டு கூடுதலாக குழிகள் தோண்ட தொல்லியல் துறை திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அகழாய்வு பணிக்காக பத்து அடி நீள அகலத்தில் குழிகள் தோண்டப்படும், அதில் கிடைக்கும் பொருட்களுக்கு ஏற்ப ஆழம் மாறுபடும்.

8ம் கட்ட அகழாய்வு நடந்த வீரணன் என்பவரின் மற்றொரு ஒன்றரை ஏக்கர் நிலத்தில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 12 குழிகள் தோண்ட திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக மூன்று குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதில் வண்ண வண்ண பாசி மணிகளும், வட்டசில்லும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மூன்று பச்சை நிற பாசிகளும், ஒரு கண்ணாடி மணியும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கொந்தகை மற்றும் அகரத்தில் இடம் சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. ஜுன் முதல் வாரத்தில் இரு இடங்களிலும் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளது. 8ம் கட்ட அகழாய்வில் செங்கல் கட்டுமானம், உறைகிணறுகள், சுடுமண் பானைகள், இருவண்ண பானைகள், ஆட்ட காய்கள், தங்க காது குத்தும் கருவி, வட்டசில்லுகள், சுடுமண் பொம்மைகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கிடைத்தன. 9ம் கட்ட அகழாய்வில் செங்கல் கட்டுமானத்தின் தொடர்ச்சி கிடைக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. இதுவரை நடந்தஅகழாய்வில் கிடைத்த பொருட்களில் 13 ஆயிரத்து 608 பொருட்கள் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தாண்டு கூடுதலாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிகளை விரைவுபடுத்த முடிவு செய்துள்ளனர் கீழடியை தொடர்ந்து  கொந்தகை , அகரத்தில் அகழாய்வு பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளனர். கீழடி புனை மெய்யாக்க செயலி என்ற ஆப் அறிமுக படுத்த பட்டுள்ளது இந்த ஆப்ஐ டவுன்டோல் செய்தல் கீழடி அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்களை மொபைல் போனில் காணலாம் தமிழக தொல்லியல் துறை சார்பில் அறிமுகப்படுத்தபடும். இந்த செயலி இளைய தலைமுறையினரிடம் பெரும் வரவேற்பை பெரும் எனவும் எதிர்பார்க்கபடுகிறது.

10th Paper Correction: 10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும்.. தனியார் பள்ளிகளுக்கு செக் வைத்த அரசுத் தேர்வுகள் இயக்ககம்.. முழு விவரம்..

Continues below advertisement