கரூரில் மீண்டும் மஞ்சள் பை எனும் தலைப்பில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கு கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.





கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மீண்டும் மஞ்சப் பை எனும் தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.




இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் கையில் பதாதைகளை ஏந்தி கொண்டனர்.




மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய இப்பேரணி திண்டுக்கல் சாலை வழியாக சுமார் 2 கி.மீ வந்து அரசு கலைக் கல்லூரியில் முடிவடைந்தது.


கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு  கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர் பிரபுசங்கர் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.


கரூர் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலக வளாகத்தில் இருந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணியில் பாலிதீன் கவல்களை ஒழிப்போம், நிலத்தை காப்போம், பிளாஸ்டிக் தவிர்ப்போம், நிலத்தடி நீரை காப்போம், பிளாஸ்டிக்கை ஒழிப்போம், நீர்வள காப்போம், பிளாஸ்டிக்கை வாங்காதே, நம் பூமி தாங்காதே, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்போம், சுத்தமான வாழ்க்கைக்கு பிளாஸ்டிக் வேண்டாம் என்று சொல்லுங்கள். இன்று பிளாஸ்டிக் எப்போதும் மாசுக்கடைக்கு செல்லும் பொழுது கைப்பை எடுத்துச் செல்வோம். பிளாஸ்டிக் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கவும், பிளாஸ்டிக் மாசினை ஒழிப்போம் நலமான தமிழகத்தை உருவாக்குவோம். வாழும் இந்த பூமியை காக்க மாற்றத்தை உருவாக்குவோம். வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம், தூய்மையான காற்றை சுவாசித்திடுவோம், நாளைய சந்ததி வளம் பெற சுற்றுச்சூழலை பாதுகாக்க மரங்களை நடுவோம். சூழ்நிலை பேணிப் பாதுகாப்போம். மறுசுழற்சிக்கு பயன்படாத பொருட்களை அறவே தவிர்த்திடுவோம், ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஒரு மரத்தை ஆவது நடவேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்வோம். மரங்கள் இருக்கும் இடம் மகிழ்ச்சி நிலைக்கும் இடம் மரம் மனிதனின் மூன்றாவது கரம் துணிப்பையை தூக்கு நெகிழிப்பை நீக்கு ஆளுக்கு ஒரு மரம் நடுவோம். மண்ணில் வாழ மண்ணை ஆள மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாய்களை ஏந்தி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் இருந்து தான்தோன்றி அரசு கலைக்கல்லூரி வரை நடைபெற்றது. இதில் தாந்தோணி அரசு கலைக்கல்லூரி, சாரதா கலைக்கல்லூரி, அமராவதி கல்லூரி, கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிரபுசங்கர் அவர்கள் தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டிய வாரியம் ஜெயலட்சுமி, உதவி பொறியாளர்கள் வேல்முருகன், ஜெயம் குமார், தனித்துறை ஆட்சியர் திரு சைபுதீன் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.