மேலும் அறிய

" கூப்பிடும் போது வரணும் " கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம் ! ரகசிய வீடியோ எடுத்து மிரட்டல்

மாணவிக்கு கஞ்சா போதை காதலன் மிரட்டல்: போலீஸ் பிடியில் இருந்து தப்பினாரா கல்லூரி மாணவர் ?

கல்லூரி மாணவியிடம் தனிமையில் இருந்த இளைஞர்

தேனி மாவட்டம் மதுரை ரிங் ரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் பொறியியல் படிப்பு மூன்றாம் ஆண்டு படித்து வருபவர் வசந்த். இவர் அதே கல்லூரியில் பயிலும் ஜூனியர் மாணவி ஒருவரிடம் பழகி வந்த நிலையில் நாளடைவில் அந்த பெண்ணை காதலிப்பதாக கூறி நெருங்கி பழகி வந்திருக்கிறார்.

மேலும் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தனது தாய் தனியார் பள்ளிக் கூடம் வைத்து நடத்தி வருவதாகவும் வருங்காலத்தில் நமது திருமணத்திற்கு பிறகு அதை நீ கவனித்துக் கொள்ளலாம் என்றும் ஆசை வார்த்தைகளை சொல்லி ஏமாற்றி வந்துள்ளார்.

அதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு மாணவியிடம் அந்த பள்ளிக் கூடத்தை பார்வையிடலாம் என கூறி வசந்த் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று இருவரும் தனிமையில் இருந்துள்ளார்.

செல்போனில் வீடியோ பதிவு

தனிமையில் இருந்த போது அதனை மாணவிக்கு தெரியாமலே வசந்த் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். இதனை அறியாத ஜூனியர் மாணவி தொடர்ந்து மாணவன் வசந்துடன் பழகி வந்த நிலையில் ஒரு கட்டத்தில் வசந்திற்கு கஞ்சா போதை பழக்கம் உள்ளது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி வசந்துடனான காதலை முறித்துக் கொண்டு அவருடன் பழகுவதை தவிர்த்து வந்துள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த வசந்த் அந்த மாணவியிடம் இருவரும் தனிமையில் இருந்து வீடியோவை காண்பித்து மிரட்டியுள்ளார்.

மேலும் தனிமையில் இருந்த வீடியோவை இணையதளத்தில் பகிர்ந்து விடுவேன் எனவும் இதனை பார்த்தால் உங்களது குடும்பத்தினர் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுவார்கள் என்றும் மிரட்டியுள்ளார்.

நான் எப்போது கூப்பிட்டாலும் தனிமையில் வரனும்

மதுரையில் உள்ள ஒரு பகுதிக்கு மாணவியை மிரட்டி வரவழைத்த வசந்த் மாணவியிடம் பேசிக் கொண்டிருந்த போது திடீரென இரும்பு கம்பியால் அவரை தாக்கியுள்ளார். இதனால் மாணவி மயக்கம் அடையவே அச்சமடைந்த வசந்த் மாணவியின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி "நான் எப்போது அழைத்தாலும் தனிமையில் என்னை சந்திக்க வேண்டும்" என மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி வீட்டில் தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் மாணவியின் தாயார் இது குறித்து விசாரித்து பின்னர் தல்லாகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் கீழ் கல்லூரி மாணவர் வசந்த் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் கல்லூரி மாணவன் வசந்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதனிடையே மாணவன் வசந்த் தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு விசாரணை வந்து சென்றதாக சொல்லப்படுகிறது. எனவே காவல்துறையினர் அவரை கைது செய்யாமல் தப்பிக்கவிட்டனரா ? என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கிடையில் தல்லாகுளம் காவல்நிலையம் முன்பு மாணவன் வசந்த் பைக்கில் செல்லும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

அரசாங்கம் விசிலில் இருந்து அசலுக்கு வர வேண்டும் - தமிழிசை மதுரையில் பேட்டி !
அரசாங்கம் விசிலில் இருந்து அசலுக்கு வர வேண்டும் - தமிழிசை மதுரையில் பேட்டி !
ADMK: தீர்ந்துபோன சக்தி இல்ல.. உங்களை தீர்த்துக்கட்டப்போகும் சக்தி..! விஜய்யை விளாசித் தள்ளிய அதிமுக!
ADMK: தீர்ந்துபோன சக்தி இல்ல.. உங்களை தீர்த்துக்கட்டப்போகும் சக்தி..! விஜய்யை விளாசித் தள்ளிய அதிமுக!
CM Vijay: இனிமே லஞ்சம் வாங்குவீங்களா? நகராட்சித்துறையில் லஞ்ச அதிகாரிகள் லிஸ்ட் எடுக்கும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: இனிமே லஞ்சம் வாங்குவீங்களா? நகராட்சித்துறையில் லஞ்ச அதிகாரிகள் லிஸ்ட் எடுக்கும் முதலமைச்சர் விஜய்!
’’கட்சியையே காப்பாத்த முடில; சிரிப்பாய் சிரிக்கும் சிலுவம்பாளையம்’’- ஈபிஎஸ்ஸுக்கு தவெக பதிலடி
’’கட்சியையே காப்பாத்த முடில; சிரிப்பாய் சிரிக்கும் சிலுவம்பாளையம்’’- ஈபிஎஸ்ஸுக்கு தவெக பதிலடி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இனிமே லஞ்சம் வாங்குவீங்களா? நகராட்சித்துறையில் லஞ்ச அதிகாரிகள் லிஸ்ட் எடுக்கும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: இனிமே லஞ்சம் வாங்குவீங்களா? நகராட்சித்துறையில் லஞ்ச அதிகாரிகள் லிஸ்ட் எடுக்கும் முதலமைச்சர் விஜய்!
NEET UG Exam City Slip: நீட் மறுதேர்வு மைய விவரம் வெளியீடு; உடனே காண்பது எப்படி? ஹால் டிக்கெட் எப்போது?
NEET UG Exam City Slip: நீட் மறுதேர்வு மைய விவரம் வெளியீடு; உடனே காண்பது எப்படி? ஹால் டிக்கெட் எப்போது?
ADMK: தீர்ந்துபோன சக்தி இல்ல.. உங்களை தீர்த்துக்கட்டப்போகும் சக்தி..! விஜய்யை விளாசித் தள்ளிய அதிமுக!
ADMK: தீர்ந்துபோன சக்தி இல்ல.. உங்களை தீர்த்துக்கட்டப்போகும் சக்தி..! விஜய்யை விளாசித் தள்ளிய அதிமுக!
’’கட்சியையே காப்பாத்த முடில; சிரிப்பாய் சிரிக்கும் சிலுவம்பாளையம்’’- ஈபிஎஸ்ஸுக்கு தவெக பதிலடி
’’கட்சியையே காப்பாத்த முடில; சிரிப்பாய் சிரிக்கும் சிலுவம்பாளையம்’’- ஈபிஎஸ்ஸுக்கு தவெக பதிலடி
Duster 1.0 Turbo Petrol Review: புதிய ரெனால்ட் டஸ்டர் 1.0 டர்போ பெட்ரோல் SUV எப்படி இருக்கு.? வாங்குறது வொர்த்தா.? ரிவ்யூவ்
புதிய ரெனால்ட் டஸ்டர் 1.0 டர்போ பெட்ரோல் SUV எப்படி இருக்கு.? வாங்குறது வொர்த்தா.? ரிவ்யூவ்
Panaiyur Babu : விசிக மாஜி எம்எல்ஏ பனையூர் பாவுவை தட்டி தூக்கிய திமுக.! ஸ்டாலின் போட்ட செம ஸ்கெட்ச்- ஷாக்கில் திருமா
விசிக மாஜி எம்எல்ஏ பனையூர் பாவுவை தட்டி தூக்கிய திமுக.! ஸ்டாலின் போட்ட செம ஸ்கெட்ச்- ஷாக்கில் திருமா
Upcoming Maruti SUVs: கார் வாங்குற பிளான் இருக்கா.? Just வெயிட்.! நவீனமா, பவர்ஃபுல்லா 4 SUV-க்கள இறக்குது மாருதி; விவரம்
கார் வாங்குற பிளான் இருக்கா.? Just வெயிட்.! நவீனமா, பவர்ஃபுல்லா 4 SUV-க்கள இறக்குது மாருதி; விவரம்
திமுக லஞ்சம் வரலன்னு கிடப்புல போட்டாங்க? நீங்களும் அதே ரூட் எடுத்தா ரூ.5000 கோடி காலி - பாஜக வார்னிங்
திமுக லஞ்சம் வரலன்னு கிடப்புல போட்டாங்க? நீங்களும் அதே ரூட் எடுத்தா ரூ.5000 கோடி காலி - பாஜக வார்னிங்
Embed widget