தமிழ்நாட்டில் ஆட்சியை அமைத்துள்ள தவெக அரசு பெண்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதே முதன்மை பணி என்று கூறியுள்ளது. அதேசமயம், தமிழ்நாட்டில் ஆங்காங்கே சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அரங்கேறி வருகிறது.

Continues below advertisement

இந்த சூழலில், திமுக ஐடி விங் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

மாணவி சடலமாக மீட்பு:

முதலமைச்சர் விஜயின் இந்த துர்நாற்ற சக்தி ஆட்சி இருமாதங்களை கடப்பதற்குள்ளே சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, பெண்களுக்கு பாதுகாப்பு என கட்டிய பொய்கோட்டைகள் அனைத்தும் பொல பொலவென உதிர்ந்து வருகிறது..

Continues below advertisement

நாட்டில் நாளுக்கு நாள் பெண்களின் பாதுகாப்பும், சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.. இதன் உச்சமாக இன்று கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மாணவி, விடுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்பு:

இதற்கு முன்பு கோவை: சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது..

17.06.2026 அன்று கோவையில் கை, கால்கள் கட்டப்பட்டு உடலில் காயங்களுடன் 25 வயது மதிக்கத்தக்க பெண் சடலமாக மீட்கப்பட்டார்.

28.06.2026 அன்று ராமநாதபுரம் பசும்பொன் நகரில் காணாமல் போன 5 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.

03.07.2026 அன்று தஞ்சாவூர் பூதலூர் அருகே காணாமல் போன 17 வயது சிறுமி, வீட்டின் அருகே உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த துயர சம்பவங்கள் ஒருபுறம் எனில், 60 வயது மூதாட்டி முதல் ஆறு வயது சிறுமி வரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் - இந்த கொடுமையை எல்லாம் எங்கே சொல்ல?

பெண்கள் பாதுகாப்பு:

வாய்கிழிய வசனம் பேசும் சேடிச முதலமைச்சர் விஜய், வெறும் வாயில் வடை சுடாமல், ரீல்ஸ் மூலம் பேருக்கு சிங்கப்பெண் ஆய்வு செய்யாமல் உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் உங்கள் செயல் திட்டத்தை காட்டுங்கள்..

இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது. தற்போது கோவையில் வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கிய நிலையில், இதுதொடர்பாக விசாரணையை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.