CM Vijay: வெள்ளை அறிக்கை... முதல் நாளே முதலமைச்சர் விஜய் கையில் எடுத்த அஸ்திரம்!
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிடுவேன் என்று அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் என்றாலே இந்தியா முழுவதும் எப்போதும் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், தமிழ்நாட்டில் இந்தாண்டு நடந்த சட்டமன்ற தேர்தல் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு முக்கிய காரணம் தமிழக வெற்றிக் கழகம்.
தவெக வாக்குறுதிகள்:
அரைநூற்றாண்டுகளாக தமிழ்நாட்டை ஆட்சி செய்த திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் தனது முதல் தேர்தலிலே வீழ்த்தி விஜய் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளார். விஜய் என்ற ஒற்றை முகத்திற்காகவே அவருக்கு 1.70 கோடி வாக்குகள் விழுந்துள்ளது.
இந்த தேர்தலில் வருடத்திற்கு 6 சிலிண்டர் இலவசம், மாதத்திற்கு ரூபாய் 2 ஆயிரத்து 500, வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூபாய் 4 ஆயிரம், அனைத்து பேருந்துகளிலும் மகளிர்களுக்கு இலவச பயணம், திருமணத்திற்கு தங்கம் என்று பல்வேறு திட்டங்களை தவெக ஆட்சியமைந்தால் செய்வோம் என்று பல்வேறு வாக்குறுதிகளை விஜய் அறிவித்திருந்தார்.
வெள்ளை அறிக்கையை கையில் எடுத்த விஜய்:
தவெக-வின் வாக்குறுதிகள் நடைமுறைக்கு சாத்தியமா? சாத்தியமற்றதா? என்ற வாதம் எழுந்தபோது தான் கூறிய அனைத்தையும் செய்வேன் என்று விஜய் திட்டவட்டமாக அறிவித்திருந்தார். தவெக ஆட்சியமைந்ததும் விஜய் அதை எப்படி நிறைவேற்றுவார்? என்று கேள்விகளும், எதிர்பார்ப்புகளும் எழுந்த நிலையில் முதல் அறிவிப்பிலே தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவதாக அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் கடன்தொகை 10 லட்சம் கோடி என்று கூறப்படும் நிலையில், தன்னுடைய திட்டங்களை உடனடியாக செயல்படுத்த முடியாமல் போனதற்கு தமிழ்நாட்டின் கடன்தொகையே காரணம் என்று விஜய் மறைமுகமாக இதன்மூலம் தெரிவித்துள்ளார்.
அஸ்திரம்:
இதனால், தவெக அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற முடியாமல் போனதற்கு திமுக அரசு ஏற்படுத்திய கடன் சுமையே காரணம் என்று மக்களிடம் உணர்த்துவதற்காக வெள்ளை அறிக்கையை ஒரு அஸ்திரமாக விஜய் தான் பதவியேற்ற முதல் நாளிலே கையில் எடுத்துள்ளார்.
தமிழ்நாட்டின் கடன் சுமையை குறைப்பதற்காகவும், வருவாயை அதிகரிப்பதற்கும் பல்வேறு திட்டங்களை வகுக்க தவெக அரசு முடிவு செய்துள்ளது. இதனால், நிதித்துறையை சரியான நபரிடம் ஒப்படைக்கவும், வருவாயை அதிகரிக்கும் வியூகங்களை வகுக்கவும் விஜய் முடிவு செய்துள்ளார்.
தயாராகும் அமைச்சரவை:
செங்கோட்டையன் தவிர முதலமைச்சர் விஜய் உள்பட அமைச்சரவையில் உள்ள அனைவருக்கும் எந்த அனுபவமும் இல்லை. இதனால், நிர்வாகத்தை எப்படி நடத்த வேண்டும்? ஒவ்வொரு துறையும் எப்படி செயல்பட வேண்டும்? என்பதற்கான வழிகாட்டுதலையும் செங்கோட்டையன் அனைவருக்கும் ஆலோசனை மூலம் வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மறு புறம் அமைச்சரவையில் யார்? யாருக்கு? எந்த துறை வழங்குவது என்ற பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
TN Speaker: சபாநாயகர் பதவியை தக்கவைக்குமா தவெக? விஜய்க்கு காத்திருக்கும் முதல் சவால்?
Before You Go
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்





















