CM Vijay Stalin Meet: மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த முதலமைச்சர்! அரசியல் இறுக்கத்தை தளர்த்தும் விஜய்!
முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் இன்று நேரில் சென்று சந்தித்து சந்தித்தார். அவரது அரசியல் பண்பு பலராலும் பாராட்டப்படுகிறது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. முதல் தேர்தலிலே தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த விஜய்:
திமுக மட்டுமே தனக்குப் போட்டி என்று மிக கடுமையாக விமர்சித்து வந்த தவெக தலைவர் விஜய், நேற்று பதவியேற்று முதலமைச்சராக பொறுப்பேற்றார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டின் நலத்திட்டங்களில் கவனம் செலுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள தவெக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த சூழலில், இன்று முதலமைச்சர் விஜய் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலினின் இல்லத்திற்கே நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார். மு.க.ஸ்டாலினும் தனது வீட்டிற்கு வந்த முதலமைச்சர் விஜய்யை கட்டியணைத்து கையைப்பிடித்து வரவேற்று அழைத்துச் சென்றார். முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி முதலமைச்சர் விஜய்யை வீட்டின் வாசலுக்கே சென்று வரவேற்றார்.
#UdhaynidhiStalin Hugs and Welcomes #CMVijay at his residence.🫂pic.twitter.com/urPrF5Bxcz
— Laxmi Kanth (@iammoviebuff007) May 11, 2026
அரசியல் இறுக்கம் தளர்வு:
வழக்கமாக தேர்தல் என்றாலே திமுக - அதிமுக இடையே இணைய மோதல் இருப்பது வழக்கம். ஆனால், இந்த தேர்தலில் திமுக - தவெக இடையே இணைய மோதல் உச்சத்திற்குச் சென்றது. கொளத்தூரில் மு.க.ஸ்டாலினே தோற்ற பிறகு இது இன்னும் உக்கிரம் அடைந்துள்ளது.
இந்த சூழலில், சட்டசபையில் ஆளுங்கட்சியாக தவெக-வும், எதிர்க்கட்சியாக திமுக-வும் செயல்பட உள்ள நிலையில் அரசியல் இறுக்கத்தைத் தவிர்க்கும் பொருட்டும் இந்த சந்திப்பு அமைந்துள்ளது. நேற்று பெரியார் திடலுக்குச் சென்ற விஜய் திக தலைவரான கி.வீரமணியைச் சந்தித்து பேசினார்.
மு.க.ஸ்டாலினைச் சந்தித்த பிறகு முதலமைச்சர் விஜய் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நேரில் சென்று சந்தித்தார். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியோரின் ஆதரவுடன் தவெக ஆட்சியை விஜய் அமைத்துள்ளார்.
அரசியல் மாண்பு:
தமிழ்நாட்டில் திமுக - அதிமுக ஆகிய கட்சிகளே அரை நூற்றாண்டுகளாக ஆட்சி செய்து வரும் சூழலில், புதியதாக ஒரு கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. இது பலருக்கும் ஆனந்தமாகவும், பலருக்கும் அதிர்ச்சியாகவும் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மற்ற கட்சியினருடனும் இணக்கமாக செயல்பட வேண்டும் என்பதற்காகவும் இந்த சந்திப்பை விஜய் நிகழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், தமிழ்நாட்டில் அரசியல் மாண்பை அதிகரிப்படுத்தும் நிகழ்வாக முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடு அமைந்திருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















