தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மிகப்பெரிய தாக்கத்தை இந்திய அளவில் ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு டெபாசிட் பெறுவாரா? 10 தொகுதியில் வெற்றி பெறுவாரா? என்று பலராலும் ஏளனமாக விமர்சிக்கப்பட்ட தவெக தாங்கள் சந்தித்த முதல் தேர்தலிலே 108 தொகுதிகளில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்றியது.

Continues below advertisement

வட இந்தியாவில் எகிறிய விஜய் செல்வாக்கு:

ஒரு நடிகராக விஜய்க்கு தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவருக்கு நடிகராக தென்னிந்தியா தவிர்த்து வட இந்தியாவிலும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். ஆனால், தமிழக தேர்தல் முடிவுகளுக்கு பிறகு விஜய்யின் செல்வாக்கு வட இந்தியாவில் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இது தவெக-வும், முதலமைச்சர் விஜய்யுமே எதிர்பார்க்காத ஒன்று என்றே கூறலாம்.

தேர்தல் பரப்புரையின்போதே விஜய்யின் வீடியோக்கள் வட இந்தியாவில் வைரலாகி வந்த சூழலில், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு விஜய்யின் பேச்சுக்களை இந்தியில் மொழி பெயர்த்து ஒளிபரப்பும் அளவிற்கு அவரது செல்வாக்கு அதிகரித்துள்ளது. இது மட்டுமின்றி, வட இந்தியாவின் பிரபல யூ டியூபர்ஸ் பலரும் விஜய் பற்றியும், தமிழக அரசியலில் அவர் எதிர்கொண்ட இடையூறுகள், வெற்றியை பெற்ற வியூகம் குறித்தும் விரிவாக பேசி வருகின்றனர்.

Continues below advertisement

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு:

இன்னும் சில யூ டியூபர்ஸ், இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்ஸர்கள் வட இந்திய மக்களிடம் அடுத்த பிரதமராக விஜய் வருவதை விரும்புகிறீர்களா? மோடி வருவதை விரும்புகிறீர்களா? என்று கேள்விகள் கேட்டும், அதற்கு அவர்கள் விஜய்யை விரும்புவதையும் வீடியோக்களாக வெளியிட்டு வருகின்றனர். வட இந்தியாவில் யூ டியூபர்ஸ், இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்ஸர்கள் இதுபோன்று வீடியோக்கள் வெளியிடுவது தவெக-வால் திட்டமிட்டு பரப்பப்படுவதாக எதிர்க்கட்சியினர் சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த குற்றச்சாட்டு உண்மையா? பொய்யா? என்று இதுவரை தெரியாவிட்டாலும் வட இந்தியாவில் விஜய்யின் பெயரும், தவெக-வின் பெயரும் பெரியளவில் அரசியல் ரீதியாக பிரபலம் அடைந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். விஜய்யைப் பின்பற்றி பல மாநிலங்களிலும் வளர்ந்து வரும் சில அரசியல் தலைவர்கள் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராகுல் காந்தி திட்டம்:

விஜய்யின் இந்த வளர்ச்சியையும், செல்வாக்கையும் காங்கிரஸ் கட்சி தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள திட்டமிட்டுள்ளது. கடந்த 3 மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு மிகப்பெரிய சவாலாக பிரதமர் மோடி உருவெடுத்துள்ள நிலையில், விஜய்யின் செல்வாக்கை தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ள ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் அடுத்து நடைபெறும் மக்களவைத் தேர்தலில், வட இந்தியாவில் எகிறிய விஜய்யின் செல்வாக்கு வாக்குகளா மாறுமா? என்பதற்கு விடை கிடைக்கும்.