மேலும் அறிய

Special Kuruvai Package : விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு.! ரூ.134.83 கோடியில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் - முதல்வர் விஜய் அதிரடி

Special Kuruvai Package : குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ளார்.

மேட்டூர் தண்ணீர் திறப்பு இல்லை- விவசாயிகள் பாதிப்பு

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி மேட்டுர் அணையானது திறக்கப்படும். ஆனால் இந்தாண்டு மேட்டூர் அணையில் உரிய வகையில் தண்ணீர் இல்லாத காரணத்தால் மேட்டூர் அணை திறக்க முடியாத சூழல் உருவானது. இதனால் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு சிறப்பு தொகுப்பு திட்டம் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் முதலமைச்சர் விஜய் குறுவை சாகுபாடி திட்டத்தை அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை, கார் மற்றும் சொர்ணவாரிப் பருவங்களில் மேற்கொள்ளப்படும் நெல் சாகுபடியை ஊக்குவித்து, நெல் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில் 2026-ஆம் ஆண்டில், 134.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். 

விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி திட்டம்

தமிழ்நாட்டில் சராசரியாக 52.72 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம். மயிலாடுதுறை மாவட்டங்களின் அனைத்துப் பகுதிகளிலும், கடலூர், திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் சில பகுதிகளிலும் நெற்பயிரே முதன்மையாக சாகுபடி செய்யப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் ஆண்டுக்கு 20.65 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், குறுவைப் பருவத்தில் மட்டும் சராசரியாக 5.14 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. மேலும், டெல்டா அல்லாத இதர மாவட்டங்களில், ஆண்டுக்கு 32.07 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் தஞ்சாவூர், நாகப்பட்டினம். திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் (பகுதி), திருச்சி (பகுதி), அரியலூர் (பகுதி) ஆகிய டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி செய்வதற்கு, மேட்டூர் அணை ஜுன் 12-ஆம் நாளன்று திறப்பது வழக்கமாகும். இந்நிலையில், நடப்பு தென்மேற்குப் பருவத்தில் 'எல்நினோ' எனும் நிகழ்வால் மழை அளவு 90 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தென்மேற்குப் பருவமழை தாமதமாகும் நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவாகவே உள்ளது. இதனால் தற்போது மேட்டூர் அணையில் நீர்மட்டம் 79.56 அடி (நீர் இருப்பு: 41.52 டிஎம்சி) மட்டுமே உள்ளது. எனவே, இன்று (ஜுன் 12) மேட்டூர் அணையைத் திறப்பதற்கான சாத்தியக்கூறு இல்லாத நிலை உள்ளது.

டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பாதிப்பு

இதனால், காவிரி டெல்டா மாவட்டங்களில் இயல்பாக நெல் சாகுபடி மேற்கொள்ளும் 5 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. எனினும், டெல்டா மாவட்டங்களில் வடிமுனைக் குழாய்க் கிணறுகள் (Filter Points) மூலம் 3.55 இலட்சம் ஏக்கர் வரை சாகுபடி மேற்கொள்ள இயலும் என்பதாலும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் தற்போது மழைப்பொழிவு சீராக இல்லாத நிலையிலும் விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட கார் / குறுவை /சொர்ணவாரிப் பருவத்தில் நெல் சாகுபடி செய்வதை ஊக்குவிக்கவும். நெல் உற்பத்தியை அதிகரித்து, விவசாயிகள் பயனடையும் வகையில் 2026-ஆம் ஆண்டிற்கான குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர்  இன்று அறிவித்துள்ளார்கள்.

134.83 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

இதன்படி, வடிமுனைக் குழாய்களைக் கொண்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை செய்யும் விவசாயிகளை சாகுபடி ஊக்குவிப்பதற்காக 77.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் கார், குறுவை மற்றும் சொர்ணவாரி நெல் சாகுபடியை ஊக்குவிப்பதற்காக 57.33 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் என மொத்தம் 134.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உழவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தில், நெல் இயந்திர நடவு / நேரடி நெல் விதைப்பிற்கான ஊக்கத்தொகை, உயிர் உரங்கள். நெல் நுண்ணூட்ட உரக்கலவை, விதை நெல் விநியோக மானியம் மற்றும் புதிதாக வெளியிடப்பட்ட நெல் இரகங்களின் சான்று விதை உற்பத்திக்கான ஊக்கத்தொகை ஆகிய இனங்களுக்கு 134.83 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடாக டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களின் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என  முதலமைச்சர்  ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

தடையில்லா மும்முனை மின்சாரம்

இத்திட்டத்தின் மூலம், இயந்திரமயமாக்கல் ஊக்குவிக்கப்படுவதுடன், மேம்படுத்தப்படும். தரமான விதைகள் மற்றும் நீர் மேலாண்மை தொழில்நுட்பங்கள் பயன்பாட்டின் மூலம் நெல் சாகுபடியின் பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் அதிகரிக்கப்படுவதுடன், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தி, மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த இத்திட்டம் உறுதுணையாக அமையும். மேலும், வேளாண் பொறியியல் துறை வாயிலாக டெல்டா மாவட்டங்களில் உள்ள 2,325 கி.மீ. நீளமுள்ள C மற்றும் D வாய்க்கால்கள் 10 கோடி ரூபாய் செலவில் தூர் வாரப்பட்டுள்ளன. மேலும், நீர்வளத்துறை மூலமாக 100 கோடி ரூபாய் செலவில் 4,971 கி.மீ. நீளமுள்ள A மற்றும் B வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது வரை 97 சதவீதப் பணிகள் முடிவுற்றுள்ளன.

மேலும், குறுவை சாகுபடிக்கு 10.714 மெட்ரிக் டன் நெல் விதைகள் மற்றும் 4.02 இலட்சம் மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தடையில்லா மும்முனை மின்சாரம் நாளொன்றுக்கு 18 மணிநேரம் வழங்கப்படும். எனவே. டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவிகளைப் பெற்றுப் பயனடையுமாறு தமிழ்நாடு முதலமைச்சர்  ச. ஜோசப் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

Advertisement

தலைப்பு செய்திகள்

வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
Cuddalore power cut: கடலூர் மக்களே உஷார்:நாளை மின்தடை... இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
Cuddalore power cut: கடலூர் மக்களே உஷார்:நாளை மின்தடை... இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
Villupuram Power Cut 09.07.2026 : விழுப்புரம் மாவட்டத்தில் நாளை கரண்ட் கட் ! உங்க ஏரியா இருக்கா?
Villupuram Power Cut 09.07.2026 : விழுப்புரம் மாவட்டத்தில் நாளை கரண்ட் கட் ! உங்க ஏரியா இருக்கா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN MBBS Seats: திட்டமிட்டு கண்டுகொள்ளாமல் விட்ட DMK? பறிபோன 650 MBBS சீட்கள் - எகிறும் கட்டணம், 7.5% சிக்கல்?
திட்டமிட்டு கண்டுகொள்ளாமல் விட்ட DMK? பறிபோன 650 MBBS சீட்கள் - எகிறும் கட்டணம், 7.5% சிக்கல்?
மருத்துவக் கல்விக்கு ஆபத்து! 700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் அபாயம்- புது கல்லூரிகளை அமைக்க கோரிக்கை!
மருத்துவக் கல்விக்கு ஆபத்து! 700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் அபாயம்- புது கல்லூரிகளை அமைக்க கோரிக்கை!
Budget Hatchbacks: ஹேட்ச்பேக்-னாலே நாங்க தான்.. சிட்டியில் ஆதிக்கம் - குறைஞ்ச விலை, நிறைஞ்ச மைலேஜ் மாடல்கள்
ஹேட்ச்பேக்-னாலே நாங்க தான்.. சிட்டியில் ஆதிக்கம் - குறைஞ்ச விலை, நிறைஞ்ச மைலேஜ் மாடல்கள்
Iran Warns US: 'நசுக்கும் பதிலடி' கொடுப்போம்.! அமெரிக்காவிற்கு ஈரான் வார்னிங்.! மீண்டும் வெடிக்கும் போர்.!?
'நசுக்கும் பதிலடி' கொடுப்போம்.! அமெரிக்காவிற்கு ஈரான் வார்னிங்.! மீண்டும் வெடிக்கும் போர்.!?
Maruti Compact SUV: டாடா-க்கு ஷாக்.! பஞ்ச்சுக்கு ஆப்பு வைக்க பிளான் போடும் மாருதி; ரூ.6 லட்சத்தில் காம்பாக்ட் SUV; புதிய விவரங்கள்
டாடா-க்கு ஷாக்.! பஞ்ச்சுக்கு ஆப்பு வைக்க பிளான் போடும் மாருதி; ரூ.6 லட்சத்தில் காம்பாக்ட் SUV; புதிய விவரங்கள்
TVK On Seeman: ”ஊழல் முதலாளிகளுக்கு ஆதரவா?” முதல்முறையாக சீமானை அட்டாக் செய்த தவெக அமைச்சர்
”ஊழல் முதலாளிகளுக்கு ஆதரவா?” முதல்முறையாக சீமானை அட்டாக் செய்த தவெக அமைச்சர்
Gold Silver Rate July 8th: நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.! இன்றும் குறைந்த தங்கம், வெள்ளி விலை; இப்போ எவ்ளோ.?
நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.! இன்றும் குறைந்த தங்கம், வெள்ளி விலை; இப்போ எவ்ளோ.?
Embed widget