மேலும் அறிய

CM Vijay: முதலமைச்சர் விஜய் - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடக்காதது ஏன்? அடம்பிடிப்பது யார்?

முதலமைச்சர் விஜய் தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களைச் சந்தித்து வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமியை மட்டும் இதுவரை சந்திக்கவில்லை.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியை சந்திக்காத விஜய்:

முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மூத்த அரசியல் தலைவர்கள் வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமான், காதர் மொய்தீ்ன் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களை தானே நேரில் சென்று சந்தித்து அவர்களிடம் ஆசி பெற்றார்.

ஆனால், விஜய் இதுவரை முன்னாள் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமியை மட்டும் சந்திக்கவில்லை. அதிமுக-வில் தற்போது உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில் சிவி சண்முகம் தரப்பினரை முதலமைச்சர் விஜய் சந்தித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியை சந்திக்காதது இதுவரை சந்திக்காதது பேசுபொருளாகவே உள்ளது.

சந்திக்க மறுக்கும் இபிஎஸ்:

முதலமைச்சர் விஜய் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அவரது தரப்பினரிடம் நேரம் கேட்டும், அவர்கள் இதுவரை நேரம் ஒதுக்காமல் உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஏனென்றால், அதிமுக-வில் தவெக-விற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக ஏற்பட்ட கருத்து மோதலில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் திரும்பியுள்ளனர். 

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் இன்று எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தி எம்எல்ஏ-க்கள் ஒன்றாக சேர்ந்து பேட்டி அளித்து அதை உறுதிப்படுத்தினர். மேலும், அதிமுக சட்டமன்ற தலைவராக எஸ்பி வேலுமணியை நியமிக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது மட்டுமின்றி அதிமுக எம்எல்ஏ-க்கள் தவெக-விற்கு ஆதரவு அளிப்பதாகவும் வெளிப்படையாக அறிவித்தனர்.

கடும் ஆதங்கம்:

தனது கட்சி எம்எல்ஏ-க்களே தனக்கு எதிராக திரும்புவதற்கும், தான் மீண்டும் முதலமைச்சர் ஆகும் வாய்ப்பை தட்டிப்பறித்ததாலும் விஜய் மீது எடப்பாடி பழனிசாமி ஆதங்கத்திலும், அதிருப்தியிலும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.  இதன் காரணமாகவே முதலமைச்சர் விஜய் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திக்க தொடர்ந்து நேரம் கோரியும் அவர் சந்திக்க மறுப்பு தெரிவித்து வருகிறார். 

உட்கட்சி மோதல்:

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கிடைத்த வாய்ப்பை சாமர்த்தியமாக பயன்படுத்தி கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். இந்த தேர்தலில் தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்து அமைச்சரவையில் இடம்பிடிக்க வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏ-க்கள் வலியுறுத்தியபோது, அதை எடப்பாடி பழனிசாமி மறுத்ததாக தகவல்கள் வெளியானது. 

இன்று பேசிய சிவி சண்முகம் திமுக ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக விரும்பியதாக தெரிவித்தார். இந்த கருத்தும் எடப்பாடி பழனிசாமி மீது அதிமுக தொண்டர்கள் பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.தற்போது பெரும்பான்மையான அதிமுக எம்எல்ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இருப்பதால் அவரது பொதுச்செயலாளர் பதவி தப்புமா? கட்சியின் கொறடாவாக எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் ஆதரவாளரே நியமிக்கப்படுவார்கள் என்பதால் எடப்பாடி பழனிசாமியும் அதற்கு கட்டுப்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.  நாளை சட்டமன்றத்தில் விஜய் அரசு மீது நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பிலும் அதிமுக எம்எல்ஏ-க்கள் பலரும் ஆதரவாக வாக்களிக்க முடிவு செய்துள்ளனர்.

Vanni Arasu: "ஏற்கவே முடியாது.." முதலமைச்சர் விஜய் செயலால் விசிக எம்எல்ஏ ஆவேசம் - எதற்காக?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai Vs Amit Shah: பிளான் போட்ட அண்ணாமலை.? 'U' டர்ன் போட வைத்த அமித் ஷா; அடுத்து என்ன.?
பிளான் போட்ட அண்ணாமலை.? 'U' டர்ன் போட வைத்த அமித் ஷா; அடுத்து என்ன.?
மதுரை மேயராகும் அழகிரியின் மகள் கயல்விழி? மிஷன் தென் மண்டலம் - தவெக ஸ்கெட்ச்..
மதுரை மேயராகும் அழகிரியின் மகள் கயல்விழி? மிஷன் தென் மண்டலம் - தவெக ஸ்கெட்ச்..
Dindigul power cut (03-06-2026): நாளை திண்டுக்கல்லில் பவர் கட் - மின்சார வாரியம் அவசர அறிவிப்பு
நாளை திண்டுக்கல்லில் பவர் கட் - மின்சார வாரியம் அவசர அறிவிப்பு
Theni power cut: தேனியில் நாளை (03-06-2026 ) எங்கெல்லாம் மின்தடை அறிவிப்பு விவரம் வெளியீடு
தேனியில் நாளை (03-06-2026 ) எங்கெல்லாம் மின்தடை அறிவிப்பு விவரம் வெளியீடு
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Vs Amit Shah: பிளான் போட்ட அண்ணாமலை.? 'U' டர்ன் போட வைத்த அமித் ஷா; அடுத்து என்ன.?
பிளான் போட்ட அண்ணாமலை.? 'U' டர்ன் போட வைத்த அமித் ஷா; அடுத்து என்ன.?
மதுரை மேயராகும் அழகிரியின் மகள் கயல்விழி? மிஷன் தென் மண்டலம் - தவெக ஸ்கெட்ச்..
மதுரை மேயராகும் அழகிரியின் மகள் கயல்விழி? மிஷன் தென் மண்டலம் - தவெக ஸ்கெட்ச்..
Annamalai: அண்ணாமலையும் போயிட்டா அதோகதிதான்! தமிழ்நாட்டில் பாஜக-வின் நிலைமை அவ்ளோதானா?
Annamalai: அண்ணாமலையும் போயிட்டா அதோகதிதான்! தமிழ்நாட்டில் பாஜக-வின் நிலைமை அவ்ளோதானா?
பள்ளி மாணவிகளுக்கு 3 நாள் பீரியட்ஸ் லீவ்: கண்ணியம் காக்குமா? காற்றில் பறக்குமா? தொடர் விவாதம்!
பள்ளி மாணவிகளுக்கு 3 நாள் பீரியட்ஸ் லீவ்: கண்ணியம் காக்குமா? காற்றில் பறக்குமா? தொடர் விவாதம்!
Annamalai: டெல்லியிலிருந்து அண்ணாமலை போட்ட ட்வீட்..! CM விஜய்க்கு கேள்வி - திமுக மீதும் அட்டாக்
Annamalai: டெல்லியிலிருந்து அண்ணாமலை போட்ட ட்வீட்..! CM விஜய்க்கு கேள்வி - திமுக மீதும் அட்டாக்
Assembly Secretary Srinivasan : சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.!! இது தான் காரணமா.?
சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.!! இது தான் காரணமா.?
EPS Statement: ஆட்சி நடத்துவது எப்படி.? நீங்க 6 மாத Course முடிப்பதற்குள் மக்கள் மடியனுமா.? விஜய்யை வெளுத்து வாங்கிய இபிஎஸ்
இன்னும் பஞ்ச் டயலாக் பேசும் ரீல் ஹீரோவாகவே இருக்காதீங்க.! மாய உலகில் இருந்து வெளியே வாங்க விஜய் - இபிஎஸ் அதிரடி
TN By-Election: நமக்குள்ள சண்டை வேண்டாம்..! ”உனக்கு 4, எனக்கு 1” ஆளுங்கட்சியை வீழ்த்த (அ)திமுக தொகுதி பங்கீடு
நமக்குள்ள சண்டை வேண்டாம்..! ”உனக்கு 4, எனக்கு 1” ஆளுங்கட்சியை வீழ்த்த (அ)திமுக தொகுதி பங்கீடு
Embed widget