கலைஞர் நூற்றாண்டு விழாவில் ரஜினி கலந்து கொள்ளவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. இந்த நிகழ்ச்சி மூலம் அந்த ஏக்கம் தீர்ந்துவிட்டது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


ஸ்டாலினின் ஏக்கத்தை தீர்த்து வைத்த ரஜினி:


'கலைஞர் என்னும் தாய்' நூல் வெளியிட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் “கலைஞர் நூற்றாண்டு விழாவில் ரஜினி கலந்து கொள்ளவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. இந்த நிகழ்ச்சி மூலம் அந்த ஏக்கம் தீர்ந்துவிட்டது. கலைஞர் எனக்கு தந்தை மட்டுமல்ல. தாயும் தான். எனக்கு மட்டுமல்ல; லட்சோபலட்சம் பேருக்கு தந்தையாகவும் தாயாகவும் இருந்தவர் கலைஞர். 


கலைஞருக்கு எ.வ.வேலு எப்படியோ அப்படித்தான் எனக்கும். அதாவது வாயை திறந்து சொல்லாமலே கண் அசைவை பார்த்தே செய்து முடிப்பவர் எ.வ.வேலு என்று கலைஞர் சொல்வார். அப்படித்தான் அவர் எனக்கும்” என்றார்.


தொடர்ந்து விரிவாக பேசிய முதலமைச்சர், "இந்திய வரைபடத்தில் பெரிய இடத்தில் இடம்பெறாத திருக்குவளை என்ற சிற்றூரில் பிறந்த கலைஞருக்கு இன்று இந்திய அரசு நாணயம் வெளியிடுகிறது என்றால் அவரை உடன்பிறப்புகளாய் நாம் இருக்கிறோம் என்பது தான் பெருமை அளிக்கிறது.


நூல் வெளியிட்டு விழா:


எ.வ. வேலு மகன் திருமணத்தின் போது ஒரு ரூபாய்க்கு அரிசி திட்டத்தை செயல்படுத்தியதற்கு அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் எ.வ.வேலுவை என பாராட்டினார். வேலுவை போன்று அனைத்து அமைச்சர்களும் செயல்பட்டால் நல்லது என பாராட்டியவர் கலைஞர்.  


கலைஞர் மனதில் நினைப்பதை அறிந்து செயல்படுத்தியவர் எ.வ.வேலு, இன்று எனக்கும் அதுபோன்று தான் உள்ளார். கலைஞர் நூற்றாண்டு நூலகம், கலைஞர் கோட்டம், கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல், நடிகர் ரஜினிகாந்த் கூறியது போல் கலைஞர் நினைவகம் என அனைத்து பணிகளையும் சிறப்பாக முடித்தவர் எ.வ.வேலு. திமுகவிலும் அவர் பல பணிகளை சிறப்பாக செய்துள்ளார்.


மிசா கட்சிகளை விவரிக்கப்பட்ட போது நான் தாக்கப்பட்ட காட்சிகளும் இந்த புத்தகத்தில் வருகிறது. மிசாவில் கைது செய்யப்பட்ட திமுகவினரை சந்திக்க அவரது குடும்பத்தினரை சந்திக்க வேண்டும் என சிறைத்துறைக்கு கோரிக்கை விடுக்கிறார் கலைஞர். 


உங்கள் மகனை மட்டும் பார்க்க அனுமதிக்கிறோம் என பதில் வருகிறது. கைது செய்யப்பட்ட அனைத்து திமுகவினரும் அவர்களது குடும்பத்தினரை பார்த்த பின் இறுதியாகதான் என்னை சந்தித்தார் கலைஞர். இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்து என்னை ஊக்கப்படுத்திய நடிகர் ரஜினிகாந்த்.


என்னை விட வயதில் மூத்தவர் என்ற முறையில் எனக்கு அறிவுரை கூறிய ரஜினிகாந்த் நீங்கள் சொன்னதை நான் புரிந்துகொண்டேன்,  பயப்பட வேண்டாம், என்றும் நான் தவறிவிட மாட்டேன் ; நீங்கள் மனம் திறந்து பாரட்டியதற்கு நடிகர் ரஜினிகாந்திற்கு நன்றி" என்றார்.