மேலும் அறிய

CM Stalin Speech: “அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கண்களில் ரத்தக் கண்ணீர் வரவழைத்தது அதிமுக ஆட்சி“: மு.க. ஸ்டாலின்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்த முதலமைச்சருக்கு, சென்னையில் ஜாக்டோ ஜியோ சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர், அதிமுக அரசாலேயே பழைய ஓய்வூதியத் திட்டம் பறிபோனதாக கூறினார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை(TAPS ) அறிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, சென்னையில் ஜாக்டோ ஜியோ சார்பில்  பாராட்டு விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த அரசு ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முந்தைய அதிமுக ஆட்சி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கண்களில் ரத்தக் கண்ணீரை வரவழைத்ததாக குற்றம் சாட்டினார். அவரது உரையின் முக்கிய அம்சங்களை தற்போது பார்க்கலாம்.

“ஆசிரியர்கள் செய்வது பணி அல்ல, தொண்டு“

விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “மக்கள் பிரதிநிதிகளாக ஆட்சிப் பொறுப்பிற்கு வரும் நாங்களும், அரசு ஊழியர்களாக மக்களுக்காக பணியாற்றும் நீங்களும் சேர்ந்ததுதான் அரசாங்கம்'' என்று கூறினார். மேலும், ஒரு நாணயத்தின் 2 பக்கங்களாக இருக்கும் அமைச்சரவையும், அரசு ஊழியர்களையும் ஒருசேர பார்ப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சி காலம், அரசு ஊழியர்களின் நலன் காக்கும் பொற்காலமாக இருந்ததாக அவர் பெருமிதம் தெரிவித்தார். அரசு ஊழியர்களுக்காக அவர் செய்த சாதனைகளையும், சீர்திருத்தங்களையும் சொல்ல இந்த ஒரு மாநாடு போதாது என முதலமைச்சர் கூறினார். மேலும், அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நன்மைகளை மட்டுமே செய்ததுதான் கருணாநிதியின் ஆட்சி என குறிப்பிட்டார்.

பொதுமக்களின் நலனுக்கான திட்டங்களை கொண்டு சேர்ப்பவர்கள் தான் அரசு ஊழியர்கள். அதேபோல், ஆசிரியர்கள் செய்வது பணி அல்ல, தொண்டு எனவும், அவர்களால் தான் இந்தியாவிலேயே பள்ளிக் கல்வியில் 2-வது சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆசிரியர்கள் பாடுபட்டு உருவாக்கியவர்கள் தான், உலகம் முழுவதும் பெரும் பொறுப்புகளை வகித்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். திமுக அரசின் ஏராளமான திட்டங்கள் மூலம் மக்களிடம் செல்வாக்கு கிடைத்திருப்பதில், பெரும் பங்கு அரசு ஊழியர்களுடையதுதான் எனவும் அவர் தெரிவித்தார்.

மத்திய அரசு, அதிமுக ஆட்சியை சாடிய முதலமைச்சர்

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டிற்கான நிதியை மத்திய அரசு குறைத்துக் கொண்டே வருவதாகவும், தமிழ்நாட்டிற்கு திட்டமிட்டு நிதி நெருக்கடியை மத்திய அரசு ஏற்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார். அதோடு, பழைய ஓய்வூதியத் திட்டம் பறிபோனது அதிமுக ஆட்சியின் போதுதான் என்றும், வேர்வை சிந்தி உழைக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கண்களில் ரத்தக் கண்ணீரை வரவைத்தது தான் அதிமுக ஆட்சி என்று சாடினார்.

தமிழ்நாடு அரசு சந்தித்து வரும் கடும் நிதி நெருக்கடியிலும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நலன்களை காக்கும் வகையில், அத்தனை செலவினங்களையும் அரசு ஏற்கும் என்று அவர் உறுதி அளித்தார். அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை, திராவிட மாடல் 2.0-விலும் தொடர்ந்து நிறைவேற்றுவோம் என உறுதிபடத் தெரிவித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Madurai ; தமிழகத்தில் போதை கலாச்சாரம், சட்ட ஒழுங்கு சீர்கேடு: மருத்துவர் சரவணன் வேதனை!
Madurai ; தமிழகத்தில் போதை கலாச்சாரம், சட்ட ஒழுங்கு சீர்கேடு: மருத்துவர் சரவணன் வேதனை!
Assembly Election 2026: ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!
Assembly Election 2026: ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!
” குடும்ப மாண்பு முக்கியம்” - வைகோ பேச்சு! விஜய் குறித்த மறைமுக விமர்சனமா? விலைவாசி உயர்வு, ட்ரம்ப் பற்றி அனல் கக்கிய வைகோ!
” குடும்ப மாண்பு முக்கியம்” - வைகோ பேச்சு! விஜய் குறித்த மறைமுக விமர்சனமா? விலைவாசி உயர்வு, ட்ரம்ப் பற்றி அனல் கக்கிய வைகோ!
விழுப்புரத்தில் அதிரடி 'ஆக்ஷனில்' இறங்கிய தேர்தல் பிரிவு - 49 வாகனங்கள், ஜிபிஎஸ் : கிடுக்கிப்பிடி கண்காணிப்பு
விழுப்புரத்தில் அதிரடி 'ஆக்ஷனில்' இறங்கிய தேர்தல் பிரிவு - 49 வாகனங்கள், ஜிபிஎஸ் : கிடுக்கிப்பிடி கண்காணிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilnadu Election | அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்பாடுகள் என்னென்ன?
Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Assembly Election 2026: ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!
Assembly Election 2026: ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!
TN Election Date 2026: வெளியானது அறிவிப்பு; ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. முடிவு எப்போ? தேதி குறித்த ஆணையம்
TN Election Date 2026: வெளியானது அறிவிப்பு; ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. முடிவு எப்போ? தேதி குறித்த ஆணையம்
மதுரையில் பயங்கர தீ விபத்து: 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.. காரணம் என்ன?
மதுரையில் பயங்கர தீ விபத்து: 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.. காரணம் என்ன?
Assembly Election 2026: வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல்; 30-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள்; தேர்தல் ஆணையத்தின் தலையாய முயற்சி
வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல்; 30-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள்; தேர்தல் ஆணையத்தின் தலையாய முயற்சி
Election Dates 2026: தமிழ்நாடு முதல் அசாம் வரை.. 5 மாநிலங்களுக்கு தேர்தல் எப்போது? முழு தகவல் உள்ளே
Election Dates 2026: தமிழ்நாடு முதல் அசாம் வரை.. 5 மாநிலங்களுக்கு தேர்தல் எப்போது? முழு தகவல் உள்ளே
Nexon Vs Brezza EMI Plan: டாடா நெக்ஸான் Vs மாருதி பிரெஸ்ஸா; EMI-ல எந்த கார வாங்குறது மலிவா இருக்கும்.? வாங்க தெரிஞ்சுக்கலாம்
டாடா நெக்ஸான் Vs மாருதி பிரெஸ்ஸா; EMI-ல எந்த கார வாங்குறது மலிவா இருக்கும்.? வாங்க தெரிஞ்சுக்கலாம்
Madurai ; தமிழகத்தில் போதை கலாச்சாரம், சட்ட ஒழுங்கு சீர்கேடு: மருத்துவர் சரவணன் வேதனை!
Madurai ; தமிழகத்தில் போதை கலாச்சாரம், சட்ட ஒழுங்கு சீர்கேடு: மருத்துவர் சரவணன் வேதனை!
TVS E Scooters: Orbiter V1 முதல் iQube வரை.. டிவிஎஸ்-சின் இ ஸ்கூட்டர்கள் இதான் மக்களே!
TVS E Scooters: Orbiter V1 முதல் iQube வரை.. டிவிஎஸ்-சின் இ ஸ்கூட்டர்கள் இதான் மக்களே!
Embed widget