காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் திமுக பவள விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசியதாவது”
தமிழ்நாட்டை எழுச்சி பெற வைக்க திராவிட முன்னேற்றக் கழக இயக்கத்தை உருவாக்கிய பேரறிஞர் அண்ணா மற்றும் அவரது தம்பிமார்கள் திமுகவை உருவாக்கினர். 1949 ஆண்டு திமுக கட்சி தொடங்கியது , வான் மழை பொய்தது . வான் மழை வாழ்த்தி தொடங்கிய கட்சி இன்று வையகம் வாழ்த்தும் வகையில் வளர்ந்துள்ளது. அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மண்ணில் பவள விழாவை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
வெற்றிக் கூட்டணி:
திமுக என்ற மூன்று எழுத்தில் தான், மூச்சும், பேச்சும் உயிரும் உணர்வும் உள்ளது. நாம் கூட்டணி அமைத்த பிறகு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளோம் என்றால், நமது கூட்டணி வெற்றிக் கூட்டணி.
தமிழ்நாட்டில் நாம் அமைத்த கூட்டணியை பார்த்து தான் அகில இந்திய லெவல் பாஜகவை வீழ்த்த , இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது.
சில கட்சிகள் தேர்தலுக்காக , உருவாகும் அதன் பிறகு கலைந்து விடும். நாம் அப்படி அல்ல, நமக்குள் மோதல் வராத , குழப்பம் ஏற்படாதா என தாற்காலிக சந்தோஷத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் , அவர்களுடைய கனவு பலிக்காது .
அதிகாரம் நிறைந்ததாக மாநிலங்களை மாற்ற வேண்டும். அதனால்தான் மாநில சுய ஆட்சி வேண்டுமென இறுதி மூச்சாக பாடுபட்டார் கலைஞர் , கோட்டையில் மாநில முதலமைச்சர்கள் குடியேற்றுவதற்கு உரிமையை பெற்று தந்தவர் கலைஞர்தான் ,
”பாஜக எச்சரிக்கையுடன் செயல்படனும்”
ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதற்கு பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது. அதற்கு ஒரே நாடு ஒரே தேர்தல் , அப்படிதான் முதல் தேர்தல் நடந்தது என கூறுகிறார்கள் . அப்போது இருந்த மக்கள் தொகை என்ன.?
நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடத்த முடிந்ததா ? நடந்து முடிந்த தேர்தல் 7 கட்டமாக நடந்தது. இவர்கள் ஒரே நேரத்தில் , சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் நடத்துவார்களா ?
கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் , வானம் ஏறி வைகுண்டம் போன கதையாக தான் உள்ளது. காஷ்மீரில் கூட ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியவில்லை.
பாஜகவுக்கு 240 இடங்கள்தான் உள்ளன. கூட்டணியில்தான் ஆட்சி அமைத்துள்ளது. பாஜக மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். கொஞ்சம் கேப் கிடைத்தால் புகுந்து விடுவோம் என தெரிவித்தார்.
திராவிட முன்னேற்ற கழகம் நூற்றாண்டு நிறைவு பெறுவதற்குள் மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுப்போம் என உறுதி எடுப்போம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.