அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு சரண் உள்ளிட்ட 9 அறிவிப்புகளை இன்று சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் வெளியிட்டார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அந்த அறிவிப்புகள் குறித்து விரிவாக காணலாம்.

முதலமைச்சரின் 9 அறிவிப்புகள் என்னென்ன.?

சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்கான 9 அறிவிப்புகளை வெளியிட்டார். அவை,

  1. அரசு ஊழியர்களுக்கு நலன் பயக்கும் வகையில் 2% அகவிலைப்படி உயர்வு 2025 ஜனவரி 1-ம் தேதியிலிருந்து வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
  2. அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப்பலன் பெறும் நடைமுறை இந்த ஆண்டே, அக்டோபர் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என அறிவிப்பு.
  3. ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பண்டிகை பரிசுத் தொகை ரூ.500-லிருந்து ரூ.1000-ஆக உயர்த்தப்படும் என அறிவிப்பு.
  4. பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பின்போது தகுதிகாண்(Probation) பருவத்தையும் கணக்கில் எடுக்கலாம்.
  5. பெண் ஊழிர்கள் பதவி உயர்வு உள்ளிட்ட பலன்களை பெற மகப்பேறு விடுப்பு காலமும் தகுதியாக எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிப்பு.
  6. அரசு பணியாளர்கள் பணி காலத்தில் திருமண முன் பணம் ரூ.5 லட்சமாக உயர்வு.
  7. அரசு ஊழியர்களின் பிள்ளைகள் தொழிற்கல்வி பயில ரூ.1 லட்சம் முன்பணம் வழங்கப்படும்.
  8. அரசு ஊழியர்களின் பிள்ளைகள் கலை மற்றும் பாலிடெக்னிக் பயில ரூ.50,000 முன்பணம் வழங்கப்படும்.
  9. ஓய்வூதியதாரர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ரூ.4,000-லிருந்து ரூ.6,000-ஆக உயர்வு.

இதோடு, பழைய ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை ஆராய அமைக்கப்பட்டுள்ள குழு, செப்டம்பரில் அறிக்கை அளிக்கும் எனவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.