CM Stalin letter to union minister: விவசாயிகளுக்காக மத்திய வேளாண் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்! விவரம் உள்ளே..

தமிழ்நாட்டின் டெல்டா மாவட்ட விவசாயிகளின் பயிர்க்காப்பீட்டிற்கான காலவரம்பினை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Continues below advertisement

தமிழ்நாட்டின் டெல்டா மாவட்ட விவசாயிகளின் பயிர்க்காப்பீட்டிற்கான காலவரம்பினை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Continues below advertisement

அந்தக் கடிதத்தில், "வடகிழக்குப் பருவமழையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு நேற்று தாம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ததாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் செப்டம்பர் 15, 2022 முதல் தொடங்கிய சிறப்புப் (சம்பா / தாளடி / பிசானம்) பருவத்தில், விவசாயிகள் பயிர்க்காப்பீட்டிற்கான பதிவினை சிறப்பாக மேற்கொண்டு  வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகளினால் தொடர்ச்சியான விடுமுறைகள் காரணமாக, பொது சேவை மையங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் சேவைகளை பல விவசாயிகள் பெற முடியாததால், பயிர்க் காப்பீட்டிற்கான பதிவினை அவர்கள் தொடர்ந்து மேற்கொள்ள முடியவில்லை என்றும், அதனைத் தொடர்ந்து இடைவிடாத மழை பெய்து வருவதாலும், வடகிழக்குப் பருவமழை காரணமாக பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் அதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்தடை ஆகிய காரணங்களையும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் ஏற்கெனவே பயிர்க் காப்பீடு செய்ய நிர்ணயிக்கப்பட்ட 15-11-2022 என்ற காலவரம்பினை, 30-11-2022 வரை  நீட்டிக்குமாறு மேற்படி மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களால், தஞ்சாவூர் (I & II), நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் (I & II), புதுக்கோட்டை(I & II), மதுரை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராமநாதபுரம் (I & II), தேனி, திருச்சி, அரியலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஈரோடு, தருமபுரி, விழுப்புரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, பெரும்பலூர் மற்றும் சிவகங்கை ஆகிய 27 மாவட்டங்களில் பயிரிடப்படும் இரண்டாம் போக நெல் (சம்பா/ தாளடி / பிசானம்) சாகுபடிக்கான பயிர்க் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவினை 15-11-2022-லிருந்து, 30-11-2022 வரை நீட்டிக்குமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொள்வதகாத் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு ரூபாய் 1000 வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

தமிழ்நாட்டில் கடந்த மாதம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், கடந்த மாதம் 29-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தமிழ்நாடு முழுவதும் மழைப்பொழிவு அதிகரிக்கத் தொடங்கியது. 

இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக மாநிலம் முழுவதும் மழை பெய்து வந்த நிலையில், கடந்த 11-ந் தேதி மழை தீவிரமாக பெய்தது. அன்றைய நாளில் மட்டும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்தது, குறிப்பாக, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மட்டும் அன்றைய தினம் 44 செ.மீட்டர் மழை ஒரே நாளில் பொழிந்தது. 

சீர்காழியில் பெய்த வரலாறு காணாத மழையால் சீர்காழி நகரம் முழுவதும் மழையில் மிதந்தது. பல்வேறு இடங்களிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மழையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி மற்றும் தரங்கம்பாடியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது, பாதிக்கப்பட்ட பகுதிகளையும், விவசாய நிலங்களையும் நேரில் ஆய்வு செய்ததுடன் விவசாயிகளிடமும் குறைகளை கேட்டறிந்தார். இந்த சூழலில்தான், மழையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூபாய் 1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்துள்ளார்.

Continues below advertisement