தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசியல்வாதிகள், திரைபிரபலங்கள் மற்றும் திமுக தொண்டர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றன. 


அந்தவகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த பதிவில், “70வது பிறந்தநாள் காணும் தமிழக முதல்வர்  திரு. மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என பதிவிட்டிருந்தார். 






பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து: 






தமிழக முதல்வர் திரு. முக ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளோடு, பொது வாழ்வில் இன்னும் பல ஆண்டுகள் அவரது பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!


கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வாழ்த்து:


அன்புத் தோழர் முக ஸ்டாலினுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.






கேரளா-தமிழ்நாடு பிணைப்பை வலுப்படுத்த உங்கள் முயற்சிகள் மிகவும் பாராட்டத்தக்கவை. கூட்டாட்சி, மதச்சார்பின்மை மற்றும் எங்கள் தாய்மொழிகளின் பாதுகாப்பில் நின்று, நீங்கள் நாடு முழுவதும் இதயங்களை வென்றுள்ளீர்கள். உங்களுக்கு மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் வெற்றியை விரும்புகிறேன்!


தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து:






இன்று 70வது பிறந்த நாள் காணும், தமிழக முதல்வர் , திமுக தலைவர், அன்பு சகோதரர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து மக்கள் சேவையாற்ற இறைவனை பிரார்த்திக்கிறேன்.


உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து: 


முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தனது வாழ்த்தினை தெரிவித்தார்.