திமுக ஆட்சியில், ரூ.1143.23 கோடி மதிப்பில் 2,000 பாலங்கள்- சிறுபாலங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும், 47,700 மரக்கன்றுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின், திமுக ஆட்சியில் பல மேம்பாலங்கள், பல கிலோ மீட்டர் நீளத்திற்கு மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் பல முக்கியச் சாலைகள் அகலப்ப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ள குறிப்பில்
- 16,421 KM - மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய & இதர சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன
- 2000 பாலங்கள் - சிறுபாலங்கள் கட்டப்பட்டுள்ளன
- 2,130 KM முக்கியச் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளன
- 5000 KM ஊராட்சி ஒன்றியச் சாலைகள் மாவட்ட இதர சாலைகளாக மேம்படுத்தப்பட்டுள்ளன
- இதன் தொடர்ச்சியாக, செய்யூர்-பனையூர் இணைப்புச் சாலை உள்ளிட்ட செய்யூர் - வந்தவாசி - போளூர் சாலை ஆகியவை 109 KM நீளத்திற்கு 10 மீட்டர் சாலையாக அகலப்படுத்தப்பட்டு, சாலைப் பாதுகாப்பு அம்சங்களுடன் தரம் உயர்த்தப்பட்டுள்ளது!
இதில்,
- 3 ஊர்களுக்கு புறவழிச்சாலை, மழைநீர் வடிகால்கள்
- 5 உயர்மட்டப் பாலங்கள்
- 14 சிறுபாலங்கள்
- 225 குறும் பாலங்கள் + தெருவிளக்குகள், CCTV, பொதுமக்களின் வசதிக்காக கழிப்பறை வசதிகளுடன் கூடிய பேருந்து நிறுத்தங்கள்
- 47,700 மரக்கன்றுகள்
- 7 ஆண்டுகளுக்கான செயல்திறன் அடிப்படையிலான பராமரிப்புப் பணிகள் உள்ளடங்கும்!
இதன் மதிப்பு 1141.23 கோடி ரூபாய் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Also Read: உலகை பிரமிக்க வைத்த இஸ்ரோ.! 433 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி அசத்தல்